• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுகிறார்கள் - ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு

ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுகிறார்கள் - ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு

ஆயிஷா ரென்னா, கன்ஹையா குமார், ஜிக்னேஷ் மேவானி (இடமிருந்து வலமாக)

ஆயிஷா ரென்னா, கன்ஹையா குமார், ஜிக்னேஷ் மேவானி (இடமிருந்து வலமாக)

கொரோனா ஊரடங்கு சமயத்தைப் பயன்படுத்தி சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை மத்திய அரசும் டெல்லி காவல்துறையும் பழிவாங்குவதாக ஜிக்னேஷ் மேவானி எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

 • Share this:
  டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் ’பிஞ்ரா தோட்’ எனும் இடதுசாரி பெண்ணிய அமைப்பைச் சார்ந்த மாணவிகளான தேவங்கனா, நடாஷா நர்வால் ஆகியோரை கடந்த சனிக்கிழமை அன்று காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றம் அவர்களுக்குப் பிணை வழங்கியவுடன் மறுபடியும் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  இதையொட்டி குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர்களான கன்ஹையா குமார், உமர் காலித், ஜாமியா பல்கலைக்கழக மாணவி ஆயிஷா ரென்னா உள்ளிட்டோர் நேற்று காணொளிக் காட்சி மூலம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அதில் பேசிய அவர்கள், மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த தங்களின் ஆட்சேபனைகளைத் தெரிவித்தனர்.

  ஜிக்னேஷ் மேவானி பேசுகையில், ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி, குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடியவர்கள் கைது செய்யப்படுவதாகவும், மாணவச் செயல்பாட்டாளர்களின் இந்தக் கைது என்பது படுமோசமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டினார்.

  மாணவர்களை அச்சுறுத்தும் முயற்சி இது என்று குறிப்பிட்ட கன்ஹையா குமார், ”எங்களுக்கு எதிராக குரலை உயர்த்தினால் பிற மாணவச் செயல்பாட்டாளர்களைப் போல நீங்களும் சிறையில் தள்ளப்படுவீர்கள்” என அரசு எச்சரிக்கை விடுப்பதாகத் தெரிவித்தார்.

  இடதுசாரி அமைப்பான அனைத்திந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் சாய் பாலாஜி கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் ஒன்றரை லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், அரசு மாணவர்களை இலக்கு வைத்து வருகிறது. அரசு கொரோனா வைரஸ் மற்றும் புலம்பெயர்ந்தோர் விவகாரங்களைக் காட்டிலும் சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்களைக் குறிவைப்பதற்கே முன்னுரிமை தருகிறது என்றார்.

  மேலும் அவர் கூறுகையில், அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையை வாசிப்பது எப்படி ஊபா சட்டம் பாயக் காரணமாகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பாஜக தலைவர்களான கபில் மிஷ்ரா மற்றும் அனுராக் தாக்கூரின் வெறுப்புப் பேச்சுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. வெறுப்பைப் பரப்புவது தேசியவாதமாகிவிட்டது என சாடினார்.

  அதைத் தொடர்ந்து பேசிய ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவி ஆயிஷா ரென்னா, எங்கள் பல்கலைக்கழகத்திலிருந்தும் அலிகர் பல்கலையிலிருந்தும் பரவிய சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் நாடு முழுக்கப் பரவியது. ஜாமியா போராட்டத்தில் முன்னணியில் நின்ற மாணவர்களான மீரான் ஹைதர், ஆசிஃப், சஃபூரா ஸர்கார் ஆகியோரைக் கைது செய்து எங்களிடையே அச்சத்தை ஏற்படுத்த முனைகிறார்கள். ஆனால், எங்கள் போராட்டத்திலிருந்து கொஞ்சமும் நாங்கள் பின்வாங்கமாட்டோம் என்று கூறினார்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
  Also see:

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Rizwan
  First published: