கொரோனா சிகிச்சைக்கு தேவையான ஆக்ஸிஜன் சப்ளையை தேவைக்கும் அதிகமாக அதாவது நான்கு மடங்கு கூடுதலாக காட்டி பெற்றுக் கொண்டதாகவும், இதன் காரணமாக 12 மாநிலங்கள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் பாதிக்கப்பட்டதாகவும் உச்சநீதிமன்ற குழு தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாத மத்தியில் தொடங்கிய கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஆக்ஸிஜனுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது டெல்லியில் கடுமையான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதாக டெல்லி அரசு அபயக் குரலை எழுப்பியது, இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டு மத்திய அரசிடம் இருந்து ஆக்ஸிஜனை பெற்றுத்தருமாறு கோரியது.
இந்நிலையில் டெல்லி அரசு தனது தேவைக்கும் அதிகமான ஆக்ஸிஜனை மத்திய தொகுப்பில் இருந்து பெற்றுக்கொண்டதாக உச்சநீதிமன்ற குழு கண்டறிந்துள்ளது.
Also Read: வாட்ஸ் அப்பில் ஜியோ மார்ட்: இ-காமர்ஸ் வணிகத்தின் புதிய பரிணாமம் - முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்!
ஆக்ஸிஜன் சப்ளை குறித்து உச்சநீதிமன்றம் அமைத்த குழுவானது, கொரோனா இரண்டாம் அலையின் போது குறிப்பாக ஏப்ரல் 25 மற்றும் மே 10ம் தேதிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் டெல்லி அரசு கேட்டுப்பெற்ற 1140 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ஆனது, அதன் தேவையைக் காட்டிலும் 4 மடங்கு அதிகமாகும். படுக்கை வசதி அடிப்படையிலான தரவுகளின் படி டெல்லியில் ஆக்ஸிஜன் தேவை என்பது 289 மெட்ரிக் டன்னாகவே இருந்துள்ளது என உச்சநீதிமன்ற குழு தெரிவித்துள்ளது. இதனால் 12 மாநிலங்களுக்கான ஆக்ஸிஜன் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அக்குழு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், பெட்ரோலியம் மற்றும் ஆக்ஸிஜன் பாதுகாப்பு நிறுவனம் (PESO) உச்சநீதிமன்ற குழுவிடம் டெல்லியிடம் தேவைக்கும் அதிகமான கூடுதல் ஆக்ஸிஜன் கையிருப்பு இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளது, மேலும் இதன் காரணமாக பிற மாநிலங்களுக்கான ஆக்சிஜன் சப்ளை பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேசிய நெருக்கடி நிலைக்கு காரணமாக அமைந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Also Read: இந்தியாவை உலகளாவிய சோலார் வரைபடத்தில் சேர்க்க முகேஷ் அம்பானியின் ரூ.75,000 கோடி மெகா திட்டம்!
கடந்த மே 5ம் தேதி கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபது சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், டெல்லிக்கு ஆக்ஸிஜன் சப்ளையை 700 மெட்ரிக் டன்னாக பராமரிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வல்லுநர்கள் குழுவினர் டெல்லிக்கு அதிகபட்சமாக 415 டன் ஆக்ஸிஜன் தான் தேவையாக இருக்கும் என கூறுவதாக தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உச்சநீதிமன்ற அமைத்த குழுவானது ஆக்ஸிஜன் சப்ளை தொடர்பாக இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் டெல்லி அரசு தெரிவித்துள்ள தகவல்களின் படி 183 மருத்துவமனைகளில் மொத்தமாக 1140 டன் மருத்துவ ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மருத்துவமனைகளிடம் இருந்து பெற்ற தகவல்களின்படி உண்மையான ஆக்ஸிஜன் பயன்பாடு என்பது 209 மெட்ரிக் டன்னாக மட்டுமே இருந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arvind Kejriwal, COVID-19 Second Wave, Delhi, Oxygen, Oxygen cylinder