Home /News /national /

நோய்வாய்ப்பட்ட தாயாருக்கு மருந்து வாங்குவதாக சிறுமியை அழைத்துச் சென்று பலாத்காரம்!!

நோய்வாய்ப்பட்ட தாயாருக்கு மருந்து வாங்குவதாக சிறுமியை அழைத்துச் சென்று பலாத்காரம்!!

Rape

Rape

சிறுமியின் தாயாரின் உடல்நிலை மோசமடைந்தது, செய்வதறியாது திகைத்த சிறுமி, பக்கத்து வீட்டில் குடியிருந்தவரிடம் உதவி கோரியிருக்கிறார்.

    நோய்வாய்ப்பட்டிருந்த தாயாருக்கு மருந்து வாங்குவதாக கூறி அழைத்துச் சென்ற பக்கத்து வீட்டுக்காரர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

    தந்தை ஊருக்கு சென்றிருந்த நேரத்தில், நோய்வாய்ப்பட்டிருந்த தாயாருக்காக உதவி கோரிய சிறுமி பக்கத்து வீட்டுக்காரரால் பலாத்காரம் செய்யப்பட்டது மனிதநேயத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

    டெல்லியில் பாண்டவ் நகர் பகுதியில் அச்சிறுமி தனது தந்தை மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் தந்தை தனது சொந்த கிராமத்துக்கு வேலை விஷயமாக சென்றிருக்கிறார். சிறுமியும், நோய்வாய்ப்பட்ட அவரின் தாயாரும் மட்டும் தனியாக இருந்து வந்திருக்கின்றனர். இந்த நேரத்தில் சிறுமியின் தாயாரின் உடல்நிலை மோசமடைந்தது, செய்வதறியாது திகைத்த சிறுமி, பக்கத்து வீட்டில் குடியிருந்தவரிடம் உதவி கோரியிருக்கிறார்.

    Also read:  விளையாடச் சென்ற 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மைனர் சிறுவர்கள்!!

    உதவுவதாக கூறி வந்த அருண் என்ற அந்த பக்கத்து வீட்டு நபர், சிறுமியின் தாயாருக்கு மருந்து வாங்கிவரலாம் என சிறுமியையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் ஆள் அரவமற்ற பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்று அங்கு வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    பின்னர் இது தொடர்பாக யாரிடமும் சொல்லக்கூடாது, மீறி சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார். எனினும் சிறுமி இது தொடர்பாக அந்த நபர் மீது பாண்டவ் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தலைமறைவாக இருந்து வரும் அருணை தற்போது போலீசார் தேடி வருகின்றனர்.

    இதே போல டெல்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் விளையாடச் சென்ற 9 வயது சிறுமியை, மைனர் சிறுவர்கள் இருவர் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர்.

    Also read:   பத்ம விருதுக்காக குலாம் நபி ஆசாத்தை கலாய்த்த சக காங்கிரஸ் தலைவர்..

    டெல்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த திங்களன்று (ஜனவரி 24) மதியம் 2 மணியளவில் விளையாடுவதற்காக வெளியே சென்றிருக்கிறார். விளையாடி முடித்துவிட்டு மாலை 4.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். தனது தாயாரிடம் தனக்கு வயிறு வலிப்பதாக அச்சிறுமி தெரிவித்திருக்கிறார். இதன் பின்னர் என்ன நடந்தது என அவரின் தாயார் சிறுமியிடம் விசாரித்த போது அவர் கூறியவை அதிர்ச்சிகரமாக இருந்துள்ளது.

    சாஸ்திரி பூங்கா பகுதியைச் சேர்ந்த 10 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் இருவர்கள், சிறுமியை தங்கள் பகுதியில் காலியாக இருந்த வீடு ஒன்றுக்கு கடத்திச் சென்று அங்கு வைத்து இருவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி ஆபத்தான நிலையில் தற்போது ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    Also read:  2021 உலகளாவிய ஊழல் குறியீடு: இந்தியா முன்னேற்றம் - பாகிஸ்தானுக்கு கடும் சரிவு..

    சிறுமியின் தாயார் இது தொடர்பாக போலீஸ் நிலையத்திலும், மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்திருக்கிறார். இதனடிப்படையில் சாஸ்திரி பூங்கா போலீசார் சிறுவர்கள் இருவரையும் நேற்று கைது செய்து, இருவர் மீதும் போக்ஸோ, கடத்தல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால், இச்சம்பவம் தொடர்பாக பேசுகையில், “9 வயது சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் அனுபவதித்த வலியை நினைத்துப் பார்க்க முடியவில்லை. தற்போது அவர் மருத்துவமனையில் உயிருக்காக போராடி வருகிறார். அவரின் பிறப்பு உறுப்பு கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இந்த கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மனிதர்களே அல்ல. அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்” என தெரிவித்தார்.
    Published by:Arun
    First published:

    Tags: Gang rape, Rape

    அடுத்த செய்தி