டெல்லியில் காதலியை கொலை செய்து உடலை 35 துண்டாக வெட்டி நாய்களுக்கு வீசிய விவகாரத்தில், கொலைக்கு காரணம் லவ் ஜிகாத் ஆக இருக்கலாம் என பெண்ணின் தந்தை சந்தேகம் எழுப்பியுள்ளார்.
டேட்டிங் ஆப் மூலம் மலர்ந்த காதல்
கடந்த 2019ம் ஆண்டு மும்பை பால்கர் பகுதியை சேர்ந்த ஷிரத்தா (26) என்பவர் கால் செண்டர் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அஃப்தாப் அமீன் என்பவருடன் டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது காதலில் முடிந்தது.
மதத்தை காரணம் காட்டி காதலை மறுத்த பெற்றோர்
அமீன் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால், ஷிரத்தாவின் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர்களை உதறி தள்ளிய ஷிரித்தா, அமீனுடன் தனி வீட்டில் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். ஹரித்தாவின் பெற்றோர்கள் மும்பையில் வசித்து வந்ததால், அவர்கள் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளதாக கருதிய காதலர்கள் யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர்.
டெல்லிக்கு சென்ற பின்
அஃப்தாப் டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சமையல்காரராக பணியாற்றியுள்ளார். டெல்லியில் உள்ள மஹரவுலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வசித்து வந்துள்ளனர். அப்போது அஃப்தாப்பிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த ஷிரத்தா, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தினமும் இரவில் ஷிரத்தாவை அஃப்தாப் அடித்து துன்புறுத்தியுள்ளார். இது குறித்து பெற்றோரிடம் சொல்ல முடியாத ஷிரத்தா, தனது பள்ளி பருவ நண்பரான லட்சுமணன் நாடார் என்பவரிடம் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக லட்சுமணனால் ஷிரத்தாவை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. அவர் செல்போன் எண் ஸ்விட்சு ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரது சமூகவலைதள பக்கங்கள் முடங்கி இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமணன், ஷிரத்தாவின் அண்ணன் ஸ்ரீஜெய் விகாஸிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
மகளை தேடி வந்த தந்தை
இதனையடுத்து ஷிரத்தாவின் தந்தை மஹாராஷ்டிரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 8ஆம் தேதி மகளை தேடி விகாஸ் டெல்லி சென்றுள்ளார். ஷரித்தா வசித்து வந்த வீடு பூட்டியிருந்தது. அப்போது டெல்லி மஹரவுலி காவல் நிலையில் புகார் அளித்துள்ளார்.
டெல்லி காவல்துறையில் விரைந்து செயல்பட்டு அஃப்தாபை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அப்போது கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அஃப்தாப் அதிர்ச்சிகரமான வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.
அஃப்தாப்பின் வாக்குமூலம்
அதில், தானும் ஷிரத்தாவும் டெல்லியில் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் அப்போது ஷிரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மே 18 ஆம் தேதி சண்டை பெரிதாகி, ஷிரத்தாவை அஃப்தாப் தாக்கியபோது அவர் கத்தி கூக்குரல் எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஃப்தாப், ஷிரத்தாவின் வாயையும் மூக்கையும் தலையணை கொண்டு நீண்ட நேரம் அழுத்தியுள்ளார். அதில் ஷிரத்தா துடிதுடித்து இறந்தார்.
இதனை யாருக்கும் தெரியாமல் மறைக்க திட்டமிட்ட அஃப்தாப், 300 லிட்டர் ப்ரிட்ஜை வாங்கியுள்ளார். அடுத்து தான் வேலை பார்கும் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, ஷிரத்தாவின் கைகளை 3 துண்டாகவும் கால்களை 3 துண்டாகவும் உடலை மொத்தமாக 35 துண்டுகளாகவும் வெட்டியுள்ளார்.
பின்னர் அந்த துண்டுகளை பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் வைத்துள்ளார். பின்னர் தினமும் இரவு 2 மணிக்கு வெளியே சென்று ஒவ்வொரு துண்டாக நாய்களுக்கு வீசி எறிந்துள்ளார். வீட்டில் துர்நாற்றம் வீசாமல் இருக்க தினமும் ஊதுபத்திகளை கொளுத்தி வைத்துள்ளார்.
மேலும் அமெரிக்க சீரியலான ‘டெக்ஸ்டர்’-ஐ பார்த்து தான் இவ்வாறு துண்டுத்துண்டாக வெட்டி வீசியதாக கூறினார்.
தந்தையின் சந்தேகம்
இந்த விவகாரம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் தந்தை விகாஸ் கூறியதாவது, “என் மகளின் மரணம் லவ் ஜிகாத் ஆக இருக்கும் என சந்தேகப்படுகிறேன். அஃப்தாப்பிற்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். ஷிரத்தா என்னிடம் அதிகம் பேச மாட்டாள், அவள் மாமாவிடம் தான் அதிகம் பேசுவார்.” என தெரிவித்தார்.
இதனையடுத்து டெல்லி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் தங்கியிருந்த வீடு சில நாட்கள் முன்னர் தான் வாடகைக்கு எடுக்கப்பட்டது என கண்டறியப்பட்டது. ஷிரத்தாவை கொலை செய்வதற்காக திட்டமிட்டு வாடகைக்கு எடுத்தாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Delhi, Murder case