Home /News /national /

டெல்லி மாடலா... கேரள மாடலா - ஆம் ஆத்மி எம்எல்ஏ ட்வீட்டால் எழுந்த சர்ச்சை

டெல்லி மாடலா... கேரள மாடலா - ஆம் ஆத்மி எம்எல்ஏ ட்வீட்டால் எழுந்த சர்ச்சை

டெல்லி மாடல் கல்வி குறித்து அறிய கேரளாவில் இருந்து பிரதிநிதிகள் வந்துள்ளதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ செய்த ட்வீட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

டெல்லி மாடல் கல்வி குறித்து அறிய கேரளாவில் இருந்து பிரதிநிதிகள் வந்துள்ளதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ செய்த ட்வீட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

டெல்லி மாடல் கல்வி குறித்து அறிய கேரளாவில் இருந்து பிரதிநிதிகள் வந்துள்ளதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ செய்த ட்வீட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. கல்வி, சுகாதாரம், நிர்வாகம் உள்ளிட்டவற்றை அடிப்படை அம்சங்களாக உள்ளடக்கி 'டெல்லி மாடல்'என்ற முன்னுதாரமான அரசை நடத்திவருவதாக கூறிவருகிறது.

    டெல்லி மாடல் பள்ளிகள் என மாநிலத்தின் பள்ளிகளை ஆம் ஆத்மி அரசு பிராண்டிங் செய்துவரும் நிலையில், அண்மையில் டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சென்று அங்குள்ள பள்ளிகளை பார்வையிட்டார்.

    இந்நிலையில், டெல்லி கல்வி மாடலை ஆர்வமாக அறிந்துகொள்ள கேரளா மாநில அரசு தனது பிரிதிநிதிகளை டெல்லிக்கு அனுப்பியுள்ளதாகவும், அவர்களுக்கு டெல்லி அரசு முறையான வரவேற்பை தந்து பள்ளிகளை அவர்களுக்கு காட்டியதாகவும் ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. இதை ஆம் ஆத்மி சட்டப் பேரவை உறுப்பினர் அதிஷி சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆம் ஆத்மியின் இந்த தகவலை கேரளா அரசு மறுத்துள்ளது.

    கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசு ஆட்சி நடத்தி வரும் நிலையில், ஆம் ஆத்மியின் இந்த தகவலை விமர்சித்து கேரள அரசு கேள்வி எழுப்பியுள்ளது. ஆம் ஆத்மி எம்எல்ஏ ட்வீட்டிற்கு பதில் ட்வீட் தெரிவித்துள்ள கேரளா கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி, 'கேரளா கல்வித்துறை டெல்லி மாடலை அறிந்து கொள்ள யாரையும் டெல்லிக்கு அனுப்பவில்லை. அதேவேளை, கடந்த மாதம் கேரளா மாடலை அறிந்து கொள்ள டெல்லியிலிருந்து வந்த அதிகாரிகளுக்கு உரிய உதவியை கேரளா அரசு செய்துள்ளது. எந்த கேரளா அதிகாரிகளை ஆம் ஆத்மி எம்எல்ஏ வரவேற்றார் என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்' என ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: எங்கப்பா கரண்ட்ட காணோம் - தோனி மனைவி சாக்ஷி ட்விட்டரில் கேள்வி!

    இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சியை பாஜகவும் விமர்சித்துள்ளது. பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் அமித் மாளவியா தனது ட்விட்டரில், ஆம் ஆத்மி டெல்லியில் கல்வி மாடல் என்று பொய்யை கூறி வருகிறது. அமைச்சர் அமித் சிசோடியா இல்லாத கல்வி மாடல் ஒன்றை பொய்யாக பரப்ப புதிய நபர்களை வளர்த்தெடுத்து வருகிறார்" என விமர்சித்துள்ளார்.




    இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து அதற்கு பதிலளிக்கும் விதமாக டெல்லி பள்ளிகளை பார்வையிட்ட நபர்களின் விவரங்களை எம்எல்ஏ அதிஷி வெளியிட்டுள்ளார். கேரளா சஹோதயா பள்ளிகள் அமைப்பின் உறுப்பினர் தினேஷ் பாபு மற்றும் சிபிஎஸ்இ வட்டார செயலாளர் விக்டர் ஆகியோர் வந்து பார்வையிட்டதாக புகைப்படத்துடன் அதிஷி ட்வீட் செய்துள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Aam Aadmi Party, Kerala

    அடுத்த செய்தி