ஹோம் /நியூஸ் /இந்தியா /

திகார் சிறையில் அமைச்சருக்கு மசாஜ் - சிறை நிர்வாகம் விளக்கம்!

திகார் சிறையில் அமைச்சருக்கு மசாஜ் - சிறை நிர்வாகம் விளக்கம்!

வெளியான சிசிடிவி காட்சிகள்

வெளியான சிசிடிவி காட்சிகள்

மருத்துவ காரணங்களுக்காக மருத்துவர்களின் அறிவுரையின்படி அமைச்சர் ஜெயினுக்கு பிசியோதெரபி சிகிச்சை தான் வழங்கப்பட்டது என ஆம்ஆத்மி கட்சி விளக்கமளித்திருந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்தவர் பிசியோதெரபிஸ்ட் இல்லை என்றும், அவர் சக கைதி எனவும் திகார் சிறை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

  பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி மாநிலத்தின் அமைச்சர் சத்யேந்திர ஜெயின், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் அவருக்கு மற்றொரு நபர் மசாஜ் செய்யும் காட்சிகள் அண்மையில் வெளியானது. சிறையில் சத்யேந்திர ஜெயின் சொகுசாக வாழ்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

  இதையும் படிக்க : மங்களூரு குண்டுவெடிப்பு: லாட்ஜ் பக்கத்து ரூமில் ஸ்கூல் டீச்சர்.. நைசாக பேசி ஆதாரை வாங்கிய ஷாரிக்.. பரபரப்பு தகவல்கள்!

  மருத்துவ காரணங்களுக்காக மருத்துவர்களின் அறிவுரையின்படி அமைச்சர் ஜெயினுக்கு பிசியோதெரபி சிகிச்சைதான் வழங்கப்பட்டது என ஆம்ஆத்மி கட்சி விளக்கமளித்திருந்தது.

  இந்நிலையில், ஜெயினுக்கு மசாஜ் செய்துவிட்டவர் பிசியோதெரபி செய்பவர் இல்லை என்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரிங்கு எனவும், திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Aam Aadmi Party, Delhi, Minister, Tihar