ஹோம் /நியூஸ் /இந்தியா /

கிடைக்காத காதலியின் தலை.. சிக்கிய 13 எலும்புகள்.. டெல்லி கொலையில் அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் கொடூர காதலன்!

கிடைக்காத காதலியின் தலை.. சிக்கிய 13 எலும்புகள்.. டெல்லி கொலையில் அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் கொடூர காதலன்!

டெல்லி கொலை

டெல்லி கொலை

Delhi Murder Case: ஷ்ரதா வாக்கரைக் கொன்ற பிறகு அவரது உடலின் 35 துண்டுகளை அஃப்தாப் அப்புறப்படுத்தியதாகக் கூறிய காட்டில் இருந்து 10-13 எலும்புகளை போலீசார் கண்டுபிடித்தனர். அவருடைய தலை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  டெல்லியில் காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற சம்பவத்தில் கொலையாளியான அஃப்தப் புத்திசாலித்தனமாக செயல்பட்ட நிலையில், அவர் போக்கிலேயே விட்டு போலீசார் அவரை தக்க தருணத்தில் கைது செய்துள்ளது தெரியவந்துள்ளது.

  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த வாலிபர் அஃப்தப் அமீன் பூனாவாலா. இவர் மும்பையில் கால் சென்டர் ஒன்றில் பணியாற்றிவந்துள்ளார். அப்போது அங்கு உடன் பணிபுரியும் ஷ்ரத்தா என்ற பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே பழக்கம் காதலாக மலர்ந்த நிலையில், இந்த விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது.

  இருவரின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு ஏற்படவே, ஷ்ரத்தா - அஃப்தப் இருவரும் டெல்லிக்கு குடிபெயர்ந்து அங்குள்ள மெஹ்ராலி என்ற பகுதியில் வீடு எடுத்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். எனினும் மகளின் டெல்லி வீட்டை அவரது தந்தை கண்டுபிடித்தபோது, அவர் அங்கு இல்லை. எனவே மகளை காணவில்லை என அவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

  இது தொடர்பான விசாரணையில் தான் ஷர்த்தாவை அஃப்தப் கொன்றது தெரியவந்தது. திருமணம் செய்ய வலியுறுத்தியதால் இந்த கொலையை அவர் செய்ததாக கூறப்படுகிறது. மெரிக்க சீரியலான ‘டெக்ஸ்டர்’-ஐ  பார்த்து அவர் கொலையை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

  புத்திசாலித்தனமாக செயல்பட்ட அஃப்தப்:

  கடந்த மே மாதம் ஷ்ர்த்தாவை அஃப்தப் கொலை செய்துள்ளார்.  நான்கு மாதங்கள் கழித்து அக்டோபர் மாதம் அவரை காவல்துறை விசாரணைக்கு அழைத்தது. அப்போது, தன் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க, ‘காணாமல் போன’ ஷர்த்தாவை கண்டுபிடிக்க உதவிகளை தன்னால் முடிந்த உதவிகளை அவர் செய்துள்ளார்.  ஆனால், இது அவருக்கான வலை என்பது அஃப்தப் அறிந்திருக்கவில்லை.

  டைமஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி,  அக்டோபர் 6ம் தேதி போலீஸ் விசாரணைக்கு அஃப்தப் அழைக்கப்பட்டுள்ளார். அப்போது, தனக்கும் ஷர்த்தாவுக்கும் இடையே உள்ள உறவு பற்றி எவ்வித தயக்கமும் இன்றி அவர் கூறியுள்ளார். சிறு சண்டையில் அவர் தங்களது டெல்லி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அவரை தடுத்து நிறுத்தாதது தனது தவறுதான் என்றும் காவல்துறையிடம் அஃப்தப் கூறியுள்ளார்.

  இதையும் படிங்க: இனி ரயிலுக்கு குறுக்கே மாடு வராது.. வேற லெவல் ப்ளானை கையில் எடுத்த ரயில்வே!

  விசாரணைக்கு பின் அவரை காவல்துறை அனுப்பியுள்ளது. அப்போது, தன் மீது எவ்வித சந்தேகமும் வராது என்று அஃப்தப் உறுதியாக இருந்துள்ளார். ஷர்த்தாவை கண்டுபிடிக்க உதவுவது போல் தான் சரியாக நடிப்பதாகவும் அதனால் தன் மீது சந்தேகம் வராது என்றும் அவர் நினைத்துள்ளார்.

  இந்த மாத தொடக்கத்தில் இரண்டாவது கட்ட விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, அவர் சில முரண்பாடான தகவல்களை வழங்கினார். எனினும் விசாரணை நிறைவுப்பெற்றதாகவும் அவர் மீது எவ்வித சந்தேகமும் இல்லை  என்ற உணர்வை அஃப்தப்க்கு காவல்துறையினர் ஏற்படுத்தினர். பின்னர், வசை  பகுதியில் உள்ள பார் ஒன்றுக்கு சென்ற அஃப்தப் மதுபோதையில் இந்த குற்றம் குறித்து கசியவிட்ட தகவல்கள் மீது சிக்கியுள்ளார்.

  அறிக்கைகளின்படி, ஷ்ரதா வாக்கரைக் கொன்ற பிறகு அவரது உடலின் 35 துண்டுகளை அஃப்தாப் அப்புறப்படுத்தியதாகக் கூறிய காட்டில் இருந்து 10-13 எலும்புகளை போலீசார் கண்டுபிடித்தனர். அவருடைய தலை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

  ஷ்ரத்தாவை கொன்ற பிறகு, ஆப்தாப் அவரது வங்கி கணக்கு செயலியை இயக்கி ரூ.54,000 பரிமாற்றம் செய்தார். அஃப்தாபின் பிளாட்டின் நிலுவையில் உள்ள ரூ. 300 தண்ணீர்க் கட்டணம், அவர் அதிக அளவு தண்ணீரைப் பயன்படுத்தியதை நிரூபித்தது.

  அறிக்கைகளின்படி, ஆப்தாப் ஷ்ரத்தாவின் உடலை குளியலறையில் வெட்டினார். அப்போது அதிகப்படியான தண்ணீரை பயன்படுத்தியதால் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், ஷர்த்தாவை கொலை செய்த பின்னர்  யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க தனது செல்போனை ஓஎல்எக்ஸ் தளத்தில் அஃப்தப் விற்றுள்ளார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Delhi, Murder