முகப்பு /செய்தி /இந்தியா / டெல்லியிலும் பரவிய குரங்கம்மை தொற்று.. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு

டெல்லியிலும் பரவிய குரங்கம்மை தொற்று.. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பாதிப்புக்குள்ளான நபர் டெல்லி மவுலான ஆசாத் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

டெல்லியைச் சேர்ந்த 31 வயது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே, கேரளாவில் மூன்று பேருக்கு இந்த குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிப்புக்கு ஆளான நபர் மேற்கு டெல்லியைச் சேர்ந்தவர் ஆவார். அன்மையில் வெளிநாடு பயணம் ஏதும் மேற்கொள்ளவில்லை என்பதால் அவருடன் அன்மையில் தொடர்பில் இருந்தவர்கள் யார் என விவரங்களை அரசு திரட்டி வருகிறது. முதல் கட்ட தகவின் படி, பாதிப்புக்கு ஆளான நபர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மனாலியில் பேச்சலர்ஸ் பாட்டி கொண்டாடியுள்ளார். அங்கிருந்து டெல்லி திரும்பிய பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மூன்று நாள்களுக்கு முன்னர் டெல்லி மவுலான ஆசாத் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு குரங்கம்மை அறிகுறி தென்பட்ட நிலையில், மருத்துவமனை மாதிரிகளை எடுத்து புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த சோதனை முடிவில் இவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த குரங்கம்மை பாதிப்பு என்பது ஒரு நபரில் இருந்து இன்னொரு நபருக்கு நேரடி தொடர்பு மூலமாகவே பரவுகிறது. மேலும், 95 சதவீத குரங்கம்மை பரவலுக்கு பாலியல் நெருக்கங்களே காரணம் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: 95 சதவீத குரங்கம்மை பரவலுக்கு பாலியல் நெருக்கங்களே காரணம்.. விந்தணுக்களில் குரங்கம்மை கண்டறியப்பட்டதால் அதிர்ச்சி..

இந்நிலையில், குரங்கம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். உலக அளவில் இதுவரை 75 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த குரங்கம்மை நோயால் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்டை மாநிலமான கேரளாவில் இதுவரை மூன்று பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு எல்லைகளில் உஷார் நிலையில் கண்காணிப்பு பணிகள் நடைபெறுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

First published:

Tags: Delhi, Monkeypox, Virus, WHO