முகப்பு /செய்தி /இந்தியா / கொலையில் முடிந்த துர்கா பூஜை கொண்டாட்டம்

கொலையில் முடிந்த துர்கா பூஜை கொண்டாட்டம்

  • Last Updated :

டெல்லியில் நடந்த துர்கா பூஜை கொண்டாட்டத்தில் பாடலை மாற்றுவதில் எழுந்த தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் கயிலா எனுமிடத்தில் நடந்த துர்கா பூஜைக்கான விழா கொண்டாடப்பட்டது. துர்கா பூஜையில் பாடல் ஒளிபரப்பும் பணியில் வினய், மனோஜ் மற்றும் மகேஷ் ஆகியோர் இருந்து வந்தனர். அந்நிகழ்வில் ஒளிபரப்பட்ட பாடலை மாற்றுமாறு அதே பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவர் அங்கிருந்த இளைஞரிடம் கூறியுள்ளார்.

அப்போது பேச்சுவார்த்தை கொஞ்சம் கொஞ்சமாக தகராறாக மாறியுள்ளது. நடந்த சண்டையில் கத்தியால் ரியாஸை அந்த மூன்று பேரும் தாக்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக படுகாயமடைந்த  ரியாஸ் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் கத்தியால் தலையில் கடுமையாக தாக்கப்பட்டதால் ரியாஸ் நடுவழியிலேயே உயிரிழந்தார்.

top videos

    இந்நிலையில் காவல்துறையினர் குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்துள்ளனர். ரியாஸின் உடல் அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. துர்கா பூஜை கொண்டாட்டத்தில் நடந்த உயிரிழப்பு அங்கிருந்தவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Delhi, Durga pooja murder, Durga puja 2018, Durga puja pandal 2018, Festival2018​