ஆன்லைனில் ஸ்லோ பாய்சன் ஆர்டர்... மீன் குழம்பில் கலக்கப்பட்ட விஷம் - மருமகனால் தொழிலதிபர் குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்

கோப்புப் படம்

ஜனவரி மாதம் வருண் ஆரோரா எங்கள் குடும்பத்தினருக்கு மீன் குழம்பு பரிமாறினார். ஆனால் அவர் அந்த உணவை உண்ணவில்லை எனக் கூறியுள்ளார் மோகன் ஷர்மா.

 • Share this:
  டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியின் வீட்டினருக்கு மெல்லக் கொள்ளும் விஷயத்தை உணவில் பரிமாறி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

  டெல்லியை சேர்ந்த 62 வயதான தேவேந்திர மோகன் ஷர்மா என்பவர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளிக்கிறார். தன்னுடைய மனைவி கங்கா ராம் மருத்துவமனையில் இறந்து விட்டார். எனது மனைவி அனிதா ஷர்மாவை என்னுடைய மருமகன் வருண் அரோரோ கொலை செய்திருப்பாரோ என சந்தேகமாக உள்ளது என அந்தப் புகாரில் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து டெல்லி காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பினர். இதில் அவரது உடலில் விஷத்தன்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவரை மெல்ல கொல்லக்கூடிய விஷம் அவரது உடலில் அதிகளவில் இருந்தது தெரியவந்துள்ளது.

  விசாரணையில் தேவேந்திர மோகன் ஷர்மாவின் ஒரு மகள் கடந்த மாதம் இதேபோல் உயிரிழந்த தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி அவரது மூத்த மகள் கோமா நிலையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோமாவில் இருக்கும் பெண்ணின் உடலில் இருந்து ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அவரது உடலில் அந்த விஷத்தன்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேவேந்திர மோகன் ஷர்மா உடலிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அவரது உடலிலும் விஷத்தன்மை இருப்பது தெரியவந்துள்ளது. ஜனவரி மாதம் வருண் ஆரோரா எங்கள் குடும்பத்தினருக்கு மீன் குழம்பு பரிமாறினார். ஆனால் அவர் அந்த உணவை உண்ணவில்லை எனக் கூறியுள்ளார் மோகன் ஷர்மா. இதனையடுத்து வருண் ஆரோராவை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலையும் காவல்துறையினரால் பெற முடியவில்லை. மிகவும் அப்பாவி போன்றே நடித்துள்ளார். இதனையடுத்து அவரது வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

  அப்போது தான் அவரது வீட்டில் அந்த விஷம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது லேப்டாபை போலீஸார் ஆராய்ந்துள்ளனர். அதில் அந்த விஷம் குறித்து தேடிப்படித்துள்ளார். மேலும் அதனை இணையத்தில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். வருணின் மாமனார் ஹோமியோபதி மருத்துகளை தயாரிக்கும் தொழிற்சாலையை வைத்துள்ளார். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க உள்ளதாக கூறி இந்த விஷத்தை ஆர்டர் செய்தது தெரியவந்துள்ளது.

  இதனையடுத்து நடத்திய விசாரணையில் 6 வருடத்துக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்துக்கு பழி வாங்கும் நோக்கில் இப்படி செய்ததாக கூறியுள்ளார். வருணின் தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலமானார். அப்போது வருணின் மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார். தனது அப்பாவே மீண்டும் தனக்கு மகனாக பிறப்பார் என வருண் எண்ணியுள்ளார். இந்நிலையில் வயிற்றில் இருக்கும் கரு போதிய வளர்ச்சியை எட்டாமல் இருந்ததால் அதனை கலைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதில் வருணுக்கு உடன்பாடில்லை. அவரது பேச்சை மீறி அவரது மனைவியும் குடும்பத்தினரும் கருவை கலைத்துள்ளனர். அதன்பின் வருணின் மனைவி இரண்டு குழந்தைகளை பெற்று தந்தார். ஆனால் முதல் கருவை கலைத்ததை தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதியுள்ளார் வருண். இதனால் மனைவியையும் அவரது குடும்பத்தையும் பழிவாங்க வேண்டும் என்ற வஞ்சத்தோடு இருந்துள்ளார். இந்நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் மீன் சமைத்து அதில் விஷம் கலந்து குடும்பத்தினருக்கு பரிமாறியுள்ளனர். தன்னுடைய குழந்தைகளுக்கு அந்த உணவை பரிமாறவில்லை. அவரும் அதனை உட்கொள்ளவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: