ஹோம் /நியூஸ் /இந்தியா /

காதலனின் அதிர்ச்சி வாக்குமூலம்.. சைக்கோ சீரியலை பார்த்து கொடூர கொலை.. இளம்பெண்ணின் மரணத்தில் அடுத்தடுத்து ஷாக்!

காதலனின் அதிர்ச்சி வாக்குமூலம்.. சைக்கோ சீரியலை பார்த்து கொடூர கொலை.. இளம்பெண்ணின் மரணத்தில் அடுத்தடுத்து ஷாக்!

அஃப்தாப், ஷிரத்தா

அஃப்தாப், ஷிரத்தா

டெக்ஸ்டரும் இதே போன்று தான் கொல்லும் ஆட்களை வெட்டி பிளாஸ்டிக் கவரில் போட்டு கால்வாயில் தூக்கி வீசுவார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  டெல்லியில் காதலியை கொலை செய்த பின் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, நாய்களுக்கு வீசிய நபர், சைக்கோ கில்லர் சீரியலான ‘டெக்ஸ்டர்’ -ஐ பார்த்து தான் அவ்வாறு செய்தேன் என அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

  கடந்த 2019ம் ஆண்டு மும்பை பால்கர் பகுதியை சேர்ந்த ஷிரத்தா (26) என்பவர் கால் செண்டர் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அஃப்தாப் அமீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலில் முடிந்தது.

  அஃப்தாப் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால், ஷிரத்தாவின் பெற்றோர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர்களை உதறி தள்ளிய ஷிரித்தா, அமீனுடன் மும்பையில் தனி வீட்டில் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். ஹரித்தாவின் பெற்றோர்கள் மும்பையில் வசித்து வந்ததால், அவர்கள் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளதாக கருதிய காதலர்கள் யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர்.

  அஃப்தாப் டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சமையல்காரராக பணியாற்றியுள்ளார். டெல்லியில் உள்ள மஹரவுலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வசித்து வந்துள்ளனர். அப்போது அஃப்தாப்பிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த ஷிரத்தா, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

  இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தினமும் இரவில் ஷிரத்தாவை அஃப்தாப் அடித்து துன்புறுத்தியுள்ளார். இது குறித்து பெற்றோரிடம் சொல்ல முடியாத ஷிரத்தா, தனது பள்ளி பருவ நண்பரான லட்சுமணன்  என்பவரிடம் பகிர்ந்துள்ளார்.

  இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக லட்சுமணனால் ஷிரத்தாவை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. அவர் செல்போன் எண் ஸ்விட்சு ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரது சமூகவலைதள பக்கங்கள் முடங்கி இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமணன், ஷிரத்தாவின் அண்ணன் ஸ்ரீஜெய் விகாஸிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

  இதனையடுத்து ஷிரத்தாவின் தந்தை மஹாராஷ்டிரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 8ஆம் தேதி மகளை தேடி விகாஸ் டெல்லி சென்றுள்ளார். ஷரித்தா வசித்து வந்த வீடு பூட்டியிருந்தது. அப்போது டெல்லி மஹரவுலி காவல் நிலையில் புகார் அளித்துள்ளார்.

  டெல்லி காவல்துறையில் விரைந்து செயல்பட்டு அஃப்தாபை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அப்போது கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அஃப்தாப் அதிர்ச்சிகரமான வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

  அதில், தானும் ஷிரத்தாவும் டெல்லியில் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் அப்போது ஷிரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில் கடந்த மே 18 ஆம் தேதி சண்டை பெரிதாகி, ஷிரத்தாவை அஃப்தாப் தாக்கியபோது அவர் கத்தி கூக்குரல் எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஃப்தாப், ஷிரத்தாவின் வாயையும் மூக்கையும் தலையணை கொண்டு நீண்ட நேரம் அழுத்தியுள்ளார். அதில் ஷிரத்தா துடிதுடித்து இறந்தார்.

  இதனை யாருக்கும் தெரியாமல் மறைக்க திட்டமிட்ட அஃப்தாப், 300 லிட்டர் ப்ரிட்ஜை வாங்கியுள்ளார். அடுத்து தான் வேலை பார்கும் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, ஷிரத்தாவின் கைகளை 3 துண்டாகவும் கால்களை 3 துண்டாகவும் உடலை மொத்தமாக 35 துண்டுகளாகவும் வெட்டியுள்ளார்.

  பின்னர் அந்த துண்டுகளை பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் வைத்துள்ளார். பின்னர் தினமும் இரவு 2 மணிக்கு வெளியே சென்று ஒவ்வொரு துண்டாக நாய்களுக்கு வீசி எறிந்துள்ளார். வீட்டில் துர்நாற்றம் வீசாமல் இருக்க தினமும் ஊதுபத்திகளை கொளுத்தி வைத்துள்ளார்.

  மேலும் அமெரிக்க சைக்கோ கில்லர் தொடரான ‘டெக்ஸ்டர்’-ஐ பார்த்து தான் இவ்வாறு துண்டுத்துண்டாக வெட்டி வீசியதாக கூறினார். டெக்ஸ்டரும் இதே போன்று தான் கொல்லும் ஆட்களை வெட்டி பிளாஸ்டிக் கவரில் போட்டு கால்வாயில் தூக்கி வீசுவார். அதேபோல் செய்தால் கொலையில் இருந்து தப்பிவிடலாம் என நினைத்து அஃப்தாப் இவ்வாறு செய்துள்ளார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Crime News, Delhi incident, Murder case