ஊழியர்களிடையே வாக்குவாதம்: விரலைக் கடித்து துண்டாக்கிய நபர் - டெல்லியில் கொடூரம்

ஊழியர்களிடையே வாக்குவாதம்: விரலைக் கடித்து துண்டாக்கிய நபர் - டெல்லியில் கொடூரம்

மாதிரிப் படம்

டெல்லியின் மயூர் விஹாரில் ஒரு காப்பீட்டு நிறுவன ஊழியர் சில வேலைகளுக்காக தன்னுடன் பணிபுரியும் நபரை சந்தித்த நிலையில் அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் மற்றொருவரின் கை விரலைக் கடித்து துண்டாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

 • Share this:
  டெல்லியின் மயூர் விஹாரில் வியாழக்கிழமை ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஹேமந்த் சித்தார்த், ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வியாழக்கிழமை, அவர் தனது சக ஊழியர் மோஹித்தை அக்ஷர்தாமில் சந்தித்தார். அங்கிருந்து இருவரும் கரோல் பாக் பயணம் செய்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

  இதற்கு பிறகு, சித்தார்த் சில வேலைகளை முடித்து கொண்டு இருவரும் மயூர் விஹாருக்குச் சென்றனர், அவருக்கு மோஹித்தின் உதவி தேவைப்பட்டது. இந்த நேரத்தில்தான் இருவரும் வேலை குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. காருக்குள் நடந்த வாக்குவாதமானது அதிகரித்து வாய்ச்சண்டை போடும் அளவிற்கு மோசமானது, இதன் விளைவாக சித்தார்த், மொஹிதின் ஆள்காட்டி விரலைக் கடித்தார்.

  இதனையடுத்து தனது முதலாளியின் காரில் இருந்து தப்பிச் சென்ற மோஹித், அருகில் இருந்த போலீஸை அழைத்து புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செய்திகளில் வெளியான தகவலின்படி, காசியாபாத்தில் வசிக்கும் மோஹித் தனது கையில் விரலை மீண்டும் இணைக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

  குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து முகத்தை பாதுகாக்க முயன்றபோது மோஹித்தின் கை விரல் கிழே விழுந்துவிட்டது, பின்னர் அது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து  சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சம்பவம் போல மும்பையில் ஒரு பயணி தனது சக பயணியின் விரலைக் கடித்தார். இந்த சம்பவம் 2019 செப்டம்பரில் ஒரு ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் நிகழ்ந்தது.

  டெல்லியில் நடந்த மற்றொரு சம்பவத்தில், சுல்தான்புரியில் குடிபோதையில் இருந்த ஒருவர் தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரின் காதுகளின் ஒரு பகுதியை கடித்து மென்று தின்றார். இதுதொடர்பான வழக்கு 2018 மே மாதம் விசாரணைக்கு வந்தது. மற்றொரு சமீபத்திய சம்பவத்தில், ஜிம்பாப்வேயில் ஒரு பெண் தனது கணவரின் ஆண்குறியை கடித்துவிட்டார். காரணம் இருவரும் தங்கள் படுக்கையறையிலிருந்த ஒரு எலியை வெளியேற்றுவது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


  செய்திகளில் வெளியான தகவல்களின்படி, தனது நண்பர்களுடன் ஒரு இரவு குடித்துவிட்டு திரும்பி வந்த அந்த பெண் தனது வீட்டில் ஒரு எலி இருந்ததைக் கண்டார். பின்னர் அந்த எலியை அகற்றுமாறு கணவரிடம் கேட்டாள். ஆனால் எலியை துரத்துவது யார் என இருவருக்கும் தீவிர வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அந்த பெண்,  தனது கணவரின் பிறப்புறுப்பை பற்களால் கடித்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
  Published by:Karthick S
  First published: