முகப்பு /செய்தி /இந்தியா / டெல்லியில் பயங்கரம்... கேபிள் அலுவலகத்திற்குள் புகுந்து மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு..!

டெல்லியில் பயங்கரம்... கேபிள் அலுவலகத்திற்குள் புகுந்து மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு..!

மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு

மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு

தலைநகர் டெல்லியில் கேபிள் அலுவலகத்திற்குள் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் கேபிள் அலுவலகத்திற்குள் புகுந்து, மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்த போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி சஞ்சல் பூங்கா பகுதியில் ஹிதேஷ் என்ற இளைஞர், கேபிள் மற்றும் ஃவைஃபை அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தாங்கள் கொண்டு வந்த கைத்துப்பாக்கியை எடுத்து, திடீரென ஹிதேஷை நோக்கி சரமாரியாகச் சுடத்தொடங்கினர்.

நொடிப்பொழுதில் நடந்தேறிய இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்த ஹிதேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Also Read : தந்தையை அடித்து உதைப்பதை காதலிக்கு வீடியோ காலில் லைவ் செய்த 21 வயது மகன்!

மர்மநபர்கள் சுட்டதில் காயம் அடைந்த ஹிதேஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Delhi, Gun fire, Gun shot