ஹோம் /நியூஸ் /இந்தியா /

வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரம்.. காதல் ஜோடி செய்த வெறிச்செயல்..

வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரம்.. காதல் ஜோடி செய்த வெறிச்செயல்..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இருவரை கூட்டிக்கொண்டு, 5 பேர் அஹுஜாவின் வீட்டிற்கு சென்று அவர்களை கொலை செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  டெல்லியில் வேலையை விட்டு நீக்கியதற்காக அழகு நிலையம் நடத்தி வந்த கணவன் மனைவி மற்றும் அவர்களது வீட்டு பணிப்பெண் ஆகியோரை முன்னாள் ஊழியர்களான காதலனும் காதலியும் திட்டம் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ஷாலு அஹுஜா என்பவர் கிழக்கு டெல்லியில் உள்ள அஷோக் நகரில் அழகு நிலையம் நடத்தி வந்துள்ளார். இவர் தனது அழகு நிலையத்தில் பணிபுரிந்த ஒரு ஆணும் பெண்ணும் காதலிப்பது தெரியவர அவர்களது நடத்தை சரியில்லை எனக்கூறி அவர்களை பணியில் இருந்து நீக்கினார். அப்பொழுது அவர்களுக்கும் ஷாலு அஹுஜா மற்றும் அவரது கணவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

  இதனால், அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்த காதலன் ஷாலு அஹுஜாவையும் அவரது கணவரையும் கொல்ல திட்டம் போட்டுள்ளார். தனது திட்டத்தை தன் காதலி மற்றும் தன் இரு நண்பர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் மேலும் இருவரை கூட்டிக்கொண்டு, 5 பேர் அஹுஜாவின் வீட்டிற்கு சென்று அவர்களை கொலை செய்துள்ளனர்.

  ஷாலு அஹுஜா மற்றும் வீட்டு வேலைப்பெண்ணின் உடல்கள் தொண்டை அறுபட்ட நிலையில் தரை தளத்தில் கிடந்தது, கணவர் சமீர் அஹுஜாவின் உடல் முதல் தளத்தில் கிடந்துள்ளது. அவர் சமையல் பாத்திரத்தை வைத்து அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். அவர்களின் கைக்குழந்தை போர்வைக்குள் உறங்கிக்கொண்டிருந்ததால் குழந்தையை அவர்கள் பார்க்கவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர்.

  6 பேரில் காதலனின் நண்பர்களை மட்டும் போலீசார் கைது செய்துள்ள நிலையில் மற்ற நான்கு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Crime News, Delhi, Murder case