ஹோம் /நியூஸ் /இந்தியா /

டெல்லியில் வீட்டின் முன்பாக பாஜக தலைவர் சுட்டுக்கொலை... போலீசார் குவிப்பு

டெல்லியில் வீட்டின் முன்பாக பாஜக தலைவர் சுட்டுக்கொலை... போலீசார் குவிப்பு

பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

டெல்லியில் பாஜக உள்ளூர் தலைவரான ஜிது சவுத்ரி தனது வீட்டின் முன்பாக சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியில் மயுர் விகார் பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து டெல்லி கிழக்கு பகுதியின் காவல் துணை ஆணையர் பிரியங்கா கஷ்யப் கூறுகையில், ’42 வயதான ஜிதேந்திர சவுத்ரி என்கிற ஜித்து தனது வீட்டின் முன்பாக சுடப்பட்டுள்ளார். அப்போது ரத்தப்போக்கு அதிகம் காணப்பட்டுள்ளது. அவரை தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க - WHO தலைவருக்கு குஜராத்தி பெயர் சூட்டிய பிரதமர் மோடி

காஜிப்பூர் காவல்நிலைய போலீசார் ரோந்துப் பணியில் நேற்றிரவு ஈடுபட்டனர். அப்போது, 8.15 மணியளவில், ஜிதேந்திர சவுத்ரி சுடப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.சம்பவம் நடந்த இடத்தில் சில துப்பாக்கி குண்டுகள் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.நேரில் இந்த சம்பவத்தை பார்த்தவர்களிடமும், சிசிடிவி காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க - வேலை கிடைக்காத விரக்தி.. மனைவிக்கு மெசேஜ் அனுப்பி கணவர் தற்கொலை

4 குண்டுகள் ஜிதேந்திராவின் உடலை துளைத்துள்ளன.பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: BJP