Home /News /national /

டெல்லியில் இன்றோடு தனியார் மதுபான கடைகள் மூடல்... மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என கணிப்பு

டெல்லியில் இன்றோடு தனியார் மதுபான கடைகள் மூடல்... மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என கணிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அரசின் திடீர் முடிவால் கையில் உள்ள சரக்குகளை விற்று தீர்க்க தனியார் கடைகள் பல்வேறு ஆஃபர்களை அறிவித்து ஸ்டாக் கிளியரன்ஸ்சில் ஈடுபட்டு வருகின்றன.

    தலைநகர் டெல்லியில் இனி அரசு மட்டுமே மதுபான கடைகளை நடத்தும் என அறிவிப்பு வெளியாகியுள்ளாதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அங்கு மதுபானத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லியில் உள்ள 468 தனியார் மது விற்பனை கடைகள் இன்றுடன் மூடப்படுகின்றன. டெல்லி அரசு பின்பற்றும் மதுபான கொள்கையில் குழப்பமான நிலைப்பாடு தான் இந்த திடீர் குழப்பத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

    2021-22 புதிய மதுக் கொள்கையை டெல்லி அரசு கொண்டுவந்தது. அதன்படி, மதுபானங்களை சில்லறை விற்னை செய்துகொள்ளவும், வீட்டிற்கே டெலிவரி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய கொள்கை இந்தாண்டு ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த கொள்கை அமல்படுத்துவதில் ஆம் ஆத்மி அரசு பெரும் ஊழல் செய்ததாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் குற்றஞ்சாட்டி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார். இந்த விவகாரம் டெல்லி ஆம் ஆத்மி அரசு மற்றும் ஆளுநர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றின் மூலம் ஆம் ஆத்மி அரசை மிரட்ட பார்கிறது மத்திய பாஜக அரசு, ஆம் ஆம்தி கட்சியினர் சிறைவாசத்திற்கு அஞ்சியவர்கள் அல்ல என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளித்திருந்தார்.

    இதையும் படிங்க: இனி எங்கிருந்தும் வேலை பார்க்கலாம்.. Work From anywhere அறிவித்த ‘Swiggy’! 

    இந்நிலையில், தனது புதிய மது கொள்கையை திரும்பப் பெறுவதாக டெல்லி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.  ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அரசு கடைகளின் மூலமே மது விற்கப்படும் எனவும், இந்த மாற்றத்திற்கான காலத்தில் ஏற்படும் தற்காலிக சிரமத்தை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 468 தனியார் மதுபான கடைகளுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமம் இன்றுடன் முடிவுக்கு வந்து அவை மூடப்படுகின்றன. இந்த திடீர் முடிவால் தங்களின் சரக்குகளை விற்று தீர்க்க தனியார் கடைகள் பல்வேறு ஆஃபர்களை அறிவித்து ஸ்டாக் கிளியரன்ஸ்சில் ஈடுபட்டு வருகின்றன.
    Published by:Kannan V
    First published:

    Tags: Aam Aadmi Party, Alcohol, Delhi

    அடுத்த செய்தி