முகப்பு /செய்தி /இந்தியா / ஜம்மா மசூதிக்குள் பெண்கள் தனியாக வரக்கூடாது - சர்ச்சையை கிளப்பிய இமாமின் உத்தரவு!

ஜம்மா மசூதிக்குள் பெண்கள் தனியாக வரக்கூடாது - சர்ச்சையை கிளப்பிய இமாமின் உத்தரவு!

டெல்லி ஜம்மா மசூதி

டெல்லி ஜம்மா மசூதி

நாட்டின் மிகப் பெரிய மசூதியான ஜம்மா மசூதியில் பெண்கள் தனியாக வர பிறப்பிக்கப்பட்ட தடை சர்ச்சையின் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.

  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் பகுதியில் முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜம்மா மசூதி உள்ளது. இந்தியாவிலேயே மிகப் பெரிய மசூதிகளில் ஒன்றான இங்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு செய்யவும், பார்வையிடவும் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த ஜம்மா மசூதிக்குள் பெண் யாரும் ஆண் துணை இல்லாமல் தனியாகவோ அல்லது குழுவாகவோ வருகை தரக்கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவை மசூதியின் ஷாகி இமாம் சையது அகமது புகாரி விதித்திருந்தார். இது தொடர்பாக அவர், "பாரம்பரியம் மிக்க இந்த மசூதி வளாகத்திற்குள் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. வழிபாட்டுத் தலமான இங்கு சில பெண்கள் தனியாக வந்து தங்கள் ஆண் நண்பர்களை பார்க்க காத்திருக்கிறார்கள். இதை தவிர்க்கதான் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மசூதி, கோயில், குருத்தவார போன்ற எந்த இடங்களாகாக இருந்தாலும் வழிபாடு என்ற நோக்கத்திற்கு தான் வர வேண்டும்" என்று விளக்கமளித்தார். மேலும், பல பெண்கள் மசூதியில் நடனமாடி, டிக்டாக் வீடியோக்கள் எடுப்பதாகவும் மசூதி நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது.

இருப்பினும் குடும்ப ஆண்கள் இல்லாமல் பெண்கள் தனியாக வரக்கூடாது உத்தரவு மிகவும் பிற்போக்குத்தனமானது என பலரும் தொடர் விமர்சனத்தை முன்வைத்தனர். குறிப்பாக டெல்லி மகளீர் ஆணையம், தேசிய மகளீர் ஆணையம் இந்த உத்தரவை கண்டித்து நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா ஷாகி இமாமிடம் தொடர்பு கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து தனது தடை உத்தரவை இமாம் திரும்பப் பெற்றார். அதேவேளை, பார்வையாளர்கள் கண்ணியத்தையும் அமைதியையும் பின்பற்ற வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

top videos
    First published:

    Tags: Delhi, Mosque