Home /News /national /

முஸ்லிம் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரமலான் சலுகையை திரும்ப பெற்றது டெல்லி குடிநீர் வாரியம்

முஸ்லிம் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரமலான் சலுகையை திரும்ப பெற்றது டெல்லி குடிநீர் வாரியம்

ரமலான் மாதம் முழுவதும் நோன்பை கடைபிடித்து சிறப்பு வழிபாடுகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ரமலான் மாதம் முழுவதும் நோன்பை கடைபிடித்து சிறப்பு வழிபாடுகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ரமலான் மாதம் முழுவதும் நோன்பை கடைபிடித்து சிறப்பு வழிபாடுகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரமலான் மாதத்தின்போது நோன்பு காரணமாக முஸ்லிம் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகையை, டெல்லி குடிநீர் வாரியம் திரும்ப பெற்றுள்ளது.

    முஸ்லிம்களின் 5 கடமைகளின் ஒன்றான ரமலான் நோன்பு, இந்தியாவில் கடந்த ஞாயிறன்று தொடங்கி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி குடிநீர் வாரியத்தில் பணியாற்றும் முஸ்லிம்களுக்கு, ரமலான் மாதத்தில் மட்டும் ஏப்ரல் 3-ம் தேதியில் இருந்து மே மாதம் 2-ம்தேதி வரை, நாள்தோறும் 2 மணி நேர விடுப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில், 2 மணி நேர சலுகை தொடர்பான அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக டெல்லி குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- 'கடந்த திங்களன்று டெல்லி குடிநீர் வாரியத்தில் பணியாற்றும் முஸ்லிம்களுக்கு நோன்பு சடங்குகளை நிறைவேற்றுவதற்காக 2 மணி நேர சிறு விடுப்பு அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் 3 முதல் மே 2-ம்தேதி வரை மட்டும் இந்த சலுகை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையும் படிங்க - பொருளாதார நெருக்கடியில் இலங்கை - 40 ஆயிரம் டன் அரிசி அனுப்பி வைக்கும் இந்தியா!

    இந்த அறிவிப்பை டெல்லி குடிநீர் வாரிய அதிகாரிகள் திரும்பப் பெற முடிவு செய்துள்ளனர். 2 மணிநேர விடுப்பு சலுகை,   உடனடியாக திரும்பப் பெறப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது. ரமலான் மாதத்தில்தான் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன், இறைவனிடம் இருந்து அவரது தூதர் முகம்மது நபிக்கு, வானவர் ஜிப்ரீல் மூலம் முதன்முறையாக அருளப்பட்டது. இதன் காரணமாக ரமலான் புனித மாதமாக முஸ்லிம்களால் கருதப்படுகிறது.

    இம்மாதம் முழுவதும் நோன்பை கடைபிடித்து சிறப்பு வழிபாடுகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Ramzan

    அடுத்த செய்தி