• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 46 ஆண்டுகளில் இல்லாத கனமழை- டெல்லி விமான நிலையத்தில் புகுந்த நீர்

46 ஆண்டுகளில் இல்லாத கனமழை- டெல்லி விமான நிலையத்தில் புகுந்த நீர்

டெல்லி விமான நிலையம்

டெல்லி விமான நிலையம்

டெல்லியில் பெய்த கனமழையின் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் மழை நீர் புகுந்தது.

  • Share this:
    தலைநகர் டெல்லியில் காலையில் கொட்டிய கனமழையால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    டெல்லியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென கனமழை கொட்டியதால் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்தது. ஜோர்பாக், ஆர்.கே. புரம் மோட்டி பாக், ராஜபுரி கார்டன் ஆகிய பகுதிகளில் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. ராம்லீலா மைதானம் அமைந்துள்ள பகுதிகளில் மழை நீர் சாலையில் குளம் போல தேங்கி காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    டெல்லி மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள ஜோர்பாங்க், ஆர்கே புரம், மோடீ பாங்ஹ் பகுதியில் கனமழை கொட்டுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. தொடர் மழை காரணமாக, மதுவிஹாரில் சாலையில் நீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. டெல்லி மாநகரில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிறுவர்கள் நீந்தி விளையாடி மகிழ்ந்தனர். எம்சிடி சிவிக் சென்டர் பகுதியில் சாலையில் ஓடிய வெள்ளநீரைக் கண்ட சிறுவர்கள் உற்சாகமடைந்தனர். சாலையின் ஒரு புறம் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சென்று கொண்டிருக்க, அதனை கண்டு கொள்ளாத சிறுவர்கள் தண்ணீரில் குதித்து மூழ்கி விளையாடினர்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதேபோல, டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்தில் மழைநீர் புகுந்தது. கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானப் போக்குவரத்து நேரம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், விமான நிலையத்தில் புகுந்த நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 1975-ம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியில் பெய்த மழையின் அளவு 1,000 மி.மீட்டரைக் கடந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: