தனியாக காரில் சென்றாலும் மாஸ்க் அணிவது கட்டாயம் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காரில் தனியாக சென்ற போதும் மாஸ்க் அணியவில்லை என்று கூறி, போக்குவரத்து காவல்துறையினர் தனக்கு 500 ரூபாய் அபராதத்தை விதித்ததாகவும், தனியாக காரில் சென்றால் மாஸ்க் அணிய தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாகவும் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சவுரவ் ஷர்மா என்பவர் மனு ஒற்றை தாக்கல் செதார்.
இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது “பொது இடங்களுக்குச் செல்லும் போது, காரை தனியாக ஓட்டிச்சென்றாலும் கூட மாஸ்க் அணிவது கட்டாயம்” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மாஸ்க் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு ஆயுதத்தம் போன்றது எனவும், காரில் தனியாக இருந்தாலும், டிராபிக் சிக்னலில் நிற்கும் போது கண்ணாடியை பலர் இறக்கி விட்டு நிற்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்பது நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
Must Read : கொரோனா 2ஆவது அலை: அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானவை - சுகாதாரத்துறை அமைச்சகம்
எனவே, இத்தகைய தருணங்களில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதில் ஆட்சேபம் தெரிவிப்பதற்கு இல்லை. உங்கள் பாதுகாப்பிற்காகவே இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுகிறது. தடுப்பூசி போட்டிருந்தாலும் மாஸ்க் அணிவது கட்டாயம்” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.