ஹோம் /நியூஸ் /இந்தியா /

தீ விபத்தில் சிக்கும் மின்சார வாகனங்கள்.. இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம்? - அரசிடம் பதில் கேட்கும் டெல்லி உயர்நீதிமன்றம்!

தீ விபத்தில் சிக்கும் மின்சார வாகனங்கள்.. இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம்? - அரசிடம் பதில் கேட்கும் டெல்லி உயர்நீதிமன்றம்!

மின்சார வாகன காப்பீடு

மின்சார வாகன காப்பீடு

வாகனங்களின் உரிமையாளரால் செய்யப்படும் எந்த ஒரு குற்றமும் காப்பீடு இல்லாததால் தண்டிக்கப்படாமல் போகலாம். எனவே மற்ற வாகனங்களை போலவே மின்சார வாகனங்களை நிர்வகிக்கும் முறையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

மின்சார வாகனங்களால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அனைத்து மின்சார வாகனங்களுக்கும், குறிப்பாக இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசியை கட்டாயமாக்குவதற்கான அவசர நடவடிக்கைகளைக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் அம்மாநில அரசிடம் கேட்டுள்ளது.

தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, நவம்பர் 2, 2022க்குள் தங்கள் பதிலைத் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து மின்சார வாகனங்களையும் கையாள்வதற்கான அவசரத் தேவை மற்றும் பயன்பாடு உருவாகியுள்ளது

ஆச்சரிய வரலாறு.. ஒடிசாவில் இவ்வளவு சங்கதி இருக்கா? டூர் மூலம் ஒரு பாரம்பரிய பயணம்!

அதேசமயம் சமீபத்தில் மின்சார வாகனங்கள் வெடிப்பு மற்றும் மின்னணு வாகனங்கள் எரியும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

"பெட்ரோல் விலை உயர்வால் எழும் சிந்தனை மாற்றம் மற்றும் அதிகரிக்கும் எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்கும் விகிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மின்சார வாகனங்களின் காப்பீடு பிரச்சினைக்கு உடனடித் தேவையை உருவாக்குகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

காப்பீடு தொடர்பான விதிகள் இல்லாததால், எந்த ஆதாரமும் இல்லாத சாலையில் ஓடும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உருவாகும். இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எலெட்ரிக் வாகனங்களுக்கு 5 நிமிடத்தில் சார்ஜ் ஏற்றும் தொழில்நுட்பம்.. நாசா கண்டுபிடிப்பு !

மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாததால் பாதிக்கப்பட்ட எவருக்கும் இறப்பு அல்லது இழப்பீடு தொடர்பான எந்தவொரு காப்பீட்டு உதவியும் கிடைப்பதில்லை. அதோடு, அத்தகைய வாகனங்களின் உரிமையாளரால் செய்யப்படும் எந்த ஒரு குற்றமும் காப்பீடு இல்லாததால் தண்டிக்கப்படாமல் போகலாம். எனவே மற்ற வாகனங்களை போலவே மின்சார வாகனங்களை நிர்வகிக்கும் முறையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று நீதிமன்றத்திடம் முறையிடப்பட்டது.

பாதுகாப்பான பேட்டரிகள் மற்றும் பிற ஒத்த நடவடிக்கைகளை வழங்கத் தவறினால் ஏற்படும் சேதங்கள் மற்றும் அபராதங்களை நிர்ணயம் செய்ய ஒரு விரிவான சட்டம் தேவைப்படும் என்றும் கூறப்பட்டது.

25kmph க்கும் அதிகமான வேகம் மற்றும் 250 kw க்கும் அதிகமான திறன் கொண்ட எந்த ஒரு இ-பைக்கிற்கும் இன்சூரன்ஸ் பாலிசி அவசியம் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Delhi, Electric bike, Electric Cars