டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு காய்ச்சல் & மூச்சுத்திணறல்

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு காய்ச்சல் & மூச்சுத்திணறல்
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர
  • Share this:
சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என வந்தது.

இந்த சூழலில் அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்ததையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்று மாலை தெரியவரும் என கூறப்பட்டுள்ளது. அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் கொரோனா தடுப்பு தொடர்பாக பல ஆலோசனைகளும், பல்வேறு மருத்துவமனைகளில் நேரடியாக ஆய்வும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Also read... ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
First published: June 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading