• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கைதாகிறாரா ப.சிதம்பரம்? முன்ஜாமின் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு!

கைதாகிறாரா ப.சிதம்பரம்? முன்ஜாமின் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு!

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கு முன் ஜாமின் தர முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதில் முறைகேடு இருந்ததாக அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கார்த்தி சிதம்பரத்தின் தலையீட்டின் பெயரில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் உள்ளது.

இந்நிலையில் , ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு முன் ஜாமின் கோரி மனு அளித்திருந்தார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். இந்த வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு சிதம்பரம் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தன.

மேலும் பார்க்க: இம்ரான்கானைப் போல பேசுகிறார் ஸ்டாலின் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: