• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • BREAKING | ப.சிதம்பரத்துக்கு ஜாமின் மறுப்பு

BREAKING | ப.சிதம்பரத்துக்கு ஜாமின் மறுப்பு

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

    ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

    தற்போது நீதிமன்ற காவலில் அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில், அமலாக்கத்துறையும் அவர் மீது விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணையில் ஜாமின் தரக்கூடாது என்று சிபிஐ தரப்பு வாதிட்டிருந்தது.

    இன்று மனு மீது தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: