ஹோம் /நியூஸ் /இந்தியா /

டெல்லி அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சியின்போது வன்முறை... போலீசார் குவிப்பு

டெல்லி அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சியின்போது வன்முறை... போலீசார் குவிப்பு

வன்முறையின்போது தீக்கிரையான வாகனங்கள்

வன்முறையின்போது தீக்கிரையான வாகனங்கள்

கல் வீச்சு, வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலத்தில் அமைதி நீடிக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

டெல்லியில் அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சியின்போது இரு தரப்பினர் இடையே வன்முறை ஏற்பட்டது. பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியின் ஜகாங்கிர்புரி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. சாலையின் இரு புறத்திலும் இரு தரப்பினர் நின்று கொண்டு கற்களை வீசுவதுபோன்ற காட்சிகள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இருதரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா, 'நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். பதற்றம் நிறைந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. மூத்த போலீஸ் அதிகாரிகள் தாங்கள் இருக்கும் இடத்தில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். கலவர தடுப்பு படையினர் போதுமான அளவு குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின்போது போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க - ஆர்எஸ்எஸ் தலைவர் வெட்டிக் கொலை... 24 மணி நேரத்தில் 2-வது கொலையால் கேரளாவில் பரபரப்பு

வன்முறை தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்பக் கூடாது என்றும் பொய்யான தகவல் மற்றும் வீடியோக்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லி வன்முறை தொடர்பாக போலீஸ் கமிஷனரை தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க - 2024 தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றிபெற காங்கிரஸ் இலக்கு... வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர்

கல் வீச்சு, வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலத்தில் அமைதி நீடிக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது ஜகாங்கிர்புரி பாபு ஜகஜீவன் ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Delhi