நூற்றுக்கும் மேற்பட்ட போராட்ட விவசாயிகளைக் காணவில்லை என புகார்: உதவ முன்வந்த கெஜ்ரிவால் அரசு
நூற்றுக்கும் மேற்பட்ட போராட்ட விவசாயிகளைக் காணவில்லை என புகார்: உதவ முன்வந்த கெஜ்ரிவால் அரசு
அரவிந்த் கேஜ்ரிவால்.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட 6 நபர் குழு மக்கள் தங்களுக்கு தகவல் கிடைத்தால் தங்கள் அமைப்பை தொடர்பு கொள்ள தொடர்பு எண்ணையும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணிக்குப் பிறகே நூற்றுக்கும் மேற்பட்ட போராட்ட விவசாயிகளைக் காணவில்லை என்று விவசாய அமைப்புகளின் தலைமை அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா புகார் எழுப்பியதையடுத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு விவசாயிகளுக்கு உதவ முன்வந்துள்ளது.
கடந்த சில தினங்களாக டெல்லியில் கைது செய்யப்பட்ட 115 விவசாயிகளின் பெயர்களை அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார். இவர்கள் எந்தெந்த சிறைகளில் உள்ளனர் என்பதையும் அவர் வெளியிட்டார். இதன் மூலம் கைது செய்யப்பட்டவர்கள் யார், காணாமல் போனவர்கள் யார் என்பதை விவசாயிகள் கண்டுபிடிக்க வழிவகை செய்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோ செய்தியாளர்கள் சந்திப்பில் கெஜ்ரிவால் கூறும்போது, பல்வேறு போராட்டத்தளங்களிலிருந்து காணாமல் போன விவசாயிகளை கண்டுப்பிடிக்க டெல்லி ஆம் ஆத்மி அரசு இயன்ற உதவியைச் செய்யும் தேவைப்பட்டால் மத்திய அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் பேசி உதவி கோரப்போவதாகவும் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சம்யுக்த கிசான் மோர்ச்சா டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலைச் சந்தித்து காணாமல் போன விவசாயிகளின் பெயர்ப்பட்டியலை அளித்தனர். இதனையடுத்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு டெல்லியின் பல்வேறு சிறைகளில் இருக்கும் விவசாயிகள் பெயர்களை வெளியிட்டார்.
மேலும் காணாமல் போன போராட்ட விவசாயிகளைக் கண்டுப்பிடிக்கவும் டெல்லி அரசு உதவும், நான் முடிந்தால் துணை நிலை ஆளுநரிடத்திலும் மத்திய அரசிடமும் பேசுவேன் என்றார் கெஜ்ரிவால்.
ஞாயிறன்று சம்யுக்த கிசான் மோர்ச்சா நூற்றுக்கும் மேற்பட்ட போராட்ட விவசாயிகளைக் காணவில்லை என்றும் அவர்கள் மாயமானது எப்படி என்றும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து விவசாய சங்கமே கமிட்டி அமைத்து தேடல் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட 6 நபர் குழு மக்கள் தங்களுக்கு தகவல் கிடைத்தால் தங்கள் அமைப்பை தொடர்பு கொள்ள தொடர்பு எண்ணையும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.