மலையாளம் பேசும் செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை - டெல்லி அரசு மருத்துவமனை எச்சரிக்கை!

செவிலியர்கள் - மாதிரி படம்

மருத்துவமனையில் அலுவலக மொழியாக இந்தி அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒன்றை தான் பயன்படுத்த வேண்டும், மலையாள மொழியில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
டெல்லியில் உள்ள முன்னணி அரசு மருத்துவமனை ஒன்று செவிலியர்கள் இனி மலையாள மொழியில் பேசக்கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதற்கு செவிலியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கோவிந்த் பல்லப் பந்த் இன்ஸ்டிடியூட் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமானது (GIPMER) டெல்லியின் மிகப்பெரும் மருத்துவமனைகளுள் ஒன்றாகும். இங்கு பணியாற்றும் செவிலியர்கள் அலுவலக வழக்கு மொழியாக இந்தி அல்லது ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் ‘கடும் நடவடிக்க்கை’ எடுக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகத்தினரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவர்கள் செவிலியர் பணியை அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். செவிலியர் படிப்பு முடித்த கேரளவாசிகள் அதிக எண்ணிகையில் பல்வேறு நாடுகளிலும், நாடு முழுவதும் செவிலியர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லியின் கோவிந்த் பல்லப் பந்த் மருத்துவமனையிலும் பெரும்பான்மையான செவிலியர்கள் மலையாளிகளாக உள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்குள் மலையாள மொழி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் நோயாளி ஒருவரிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி மருத்துவமனையில் அலுவலக மொழியாக இந்தி அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒன்றை தான் பயன்படுத்த வேண்டும், மலையாள மொழியில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்கு செவிலியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஜி.பி.பந்த் செவிலியர் சங்கத் தலைவர் லீலாதர் ராம்சந்தனி கூறுகையில், மருத்துவமனையில் மலையாள மொழியைப் பயன்படுத்துவது தொடர்பாக ஒரு நோயாளி சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிக்கு அனுப்பிய புகாரைத் தொடர்ந்து இது வெளியிடப்பட்டது, அதே நேரத்தில் "சுற்றறிக்கையில் பயன்படுத்தப்படும் சொற்களுடன் தொழிற்சங்கம் உடன்படவில்லை" என்று கூறினார்.

Also Read:   Viral Video: விமான பணிப்பெண் மீது கொடூர தாக்குதல் நடத்திய பெண்.. பற்கள் உடைப்பு.. காரணம் இது தான்!

மருத்துவமனையின் சுற்றறிக்கையில் செவிலியர்கள் மலையாள மொழி பேசுவதால் பிற நோயாளிகளுக்கு அது அசெளகரியத்தை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான நோயாளிகளுக்கும், சக ஊழியர்களுக்கும் இது குழப்பத்தை ஏற்படுத்துவதால் இதனை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Also Read:   விராட் கோலியை திகிலூட்டிய அந்த ஒரு ஓவர்.. காரணம் மகேந்திர சிங் தோனி தான்!

இருப்பினும் சுற்றறிக்கையில் குறிப்பாக மலையாள மொழியை சுட்டிக்காட்டியிருப்பது பலருக்கு அதிருப்தியை தந்துள்ளதாக செவிலியர்கள் சங்கத்தினர் கூறுகின்றனர்.

ஜி.பி.பந்த் செவிலியர் சங்கம் தவிர்த்து வேறு சில செவிலியர்கள் சங்கங்களும் மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த உத்தரவை கண்டித்துள்ளன.
Published by:Arun
First published: