தீபாவளி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் களைக்கட்டியுள்ள வேளையில், பட்டாசு பிரியர்களுக்கு டெல்லி அரசு அதிர்ச்சிக்குரிய சோக செய்தியை தந்துள்ளது. டெல்லியில் காற்று மாசு பிரச்சனை கடந்த சில ஆண்டுகளாகவே கடும் மோசமாக உள்ளது. இதனால், அங்கு வரும் ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசுகளை வெடிக்கவோ, உற்பத்தி செய்யவோ, விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவானது கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ள நிலையில், தீபாவளிக்கும் இந்த தடை பொருந்தும்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தடையை மீறி டெல்லியில் பட்டாசுகளை வாங்கி வெடித்தால் ரூ.200 அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். பட்டாசுகளை தயாரித்து விற்றால் ரூ.5,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த தடை உத்தரவை அமல்படுத்தி கண்காணிக்க 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.பட்டாசு தடை தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்.. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெலிபேடுகள்.. அவசரகால நிலையை சமாளிக்க புதிய திட்டம்!
தமிழ்நாட்டிலும் அரசு உத்தரவின்படி, தீபாவளியன்று உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு இணங்க காலை 6 முதல் 7 வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, அனுமதிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போலீசார் எச்சரித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ban firecrackers, Delhi, Fire crackers