ஹோம் /நியூஸ் /இந்தியா /

திணறடிக்கும் காற்று மாசு… மக்களை வீட்டிலிருந்தே பணிப்புரியச் சொல்லும் அரசு!

திணறடிக்கும் காற்று மாசு… மக்களை வீட்டிலிருந்தே பணிப்புரியச் சொல்லும் அரசு!

டெல்லி காற்று மாசு

டெல்லி காற்று மாசு

கார் போன்ற சொந்த வாகனங்களை வெளியே எடுப்பதை சிறிது காலத்திற்கு மக்கள் தவிர்க்க வேண்டும் என மக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  டெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு தலையாய பிரச்சனைகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. டெல்லியின் காற்றின் தரம் தீபாவளி பண்டிகையின்போது ‘மிகவும் மோசம்’ என்ற குறியீட்டை எட்டியது.

  டெல்லி அரசும் காற்று மாசை தவிர்க்க காற்று சுத்திகரிப்பு கோபுரம் என பல முயற்சிகளை செய்து வருகிறது. இருந்தபோதிலும், தற்போது காற்றின் தரம் மோசமானதையடுத்து டெல்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தலைநகரில் உள்ள மக்கள் அனைவரையும் வீட்டிலிருந்து அலுவலக பணி செய்ய வேண்டும், வாகன மாசுபாட்டைக் குறைக்க பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

  இதுகுறித்து அவர் பேசுகையில், ‘முடிந்த அளவிற்கு வீட்டிலிருந்து பணி செய்யவும், கார் போன்ற சொந்த வாகனங்களை வெளியே எடுப்பதை சிறிது காலத்திற்கு மக்கள் தவிர்க்க வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். 50 சதவீத மாசு வாகனங்களால்தான் ஏற்படுகிறது’ என்று ராய் கூறினார்.

  தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?

  மேலும், விவசாயிகளின் விவசாய எதிர்ப்புச் சட்டப் போராட்டங்களால் அவர்களை வெறுக்கும் பாஜக, பயிர் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால்தான் டெல்லியில் காற்று மாசு மிக மோசமானது என சுட்டிக்காட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

  ‘பயிர் கழிவுகளை எரிக்காததற்காக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் மாநில அரசின் திட்டத்திற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆதரவளிக்காததால், விவசாயிகள் பஞ்சாப் மாநிலத்தில் வைக்கோல் எரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாஜக தற்போது விவசாயிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய முயல்கிறது. அவர்களை பழிவாங்க வேண்டாம், அவர்களுக்கு ஆதரவளிக்கத் தொடங்குங்கள்’ என்றும் அவர் கூறினார்.

  அதுமட்டுமின்றி, அரசியல் மூலம் காற்று மாசு பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்று கூறிய சுற்றுச்சூழல் அமைச்சர், காசியாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா, குருகிராம் மற்றும் பகதூர்கர் ஆகிய இடங்களில், காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) ஒரு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றார்.

  அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சிஎஸ்இ) நடத்திய ஆய்வின்படி, டெல்லியில் 69 சதவீத காற்று மாசுபாடு மாநிலத்திற்கு வெளியில் இருந்துதான் வருகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

  Published by:Archana R
  First published:

  Tags: Air pollution, Delhi