அதிகரிக்கும் கொரோனா - டெல்லியில் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு

அதிகரிக்கும் கொரோனா - டெல்லியில் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு

வாக்களிக்கச் செல்லும்போது குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள். குழந்தையை பார்த்துக்கொள்ள நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்கள் எனில் நம்பகமான நபர்களிடம் அல்லது உறவினர் வீட்டில் விட்டுச் செல்வது நல்லது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் டெல்லியில் இன்றுமுதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவத் தொடங்கியது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது 15 நாள்களாக நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96,982 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 47,288 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  டெல்லியில் இதுவரையில் 6,79,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில், 11,096 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் ஏப்ரல் 30-ம் தேதி வரை இரவு நேர உரடங்கை டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்த உரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதேநேரத்தில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் மையம் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிகளின்படி, தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரவு நேரத்தில் பேருந்து, மெட்ரோ, ஆட்டோகள் செயல்படுவதற்கு தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: