கொரோனா பாதிப்பு அதிகரிப்பில் மகாராஷ்டிராவை பின் தொடரும் டெல்லி?

டெல்லி

நிதி ஆயோக்கின் சுகாதார பிரிவு உறுப்பினர் வி.கே.பால் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, மகாராஷ்டிரா மீண்டும் ஊரடங்கினை நோக்கி செல்வது கவலையளிக்கிறது, ஆனால் மகாராஷ்டிரா மட்டுமே கவலைப்படும் நிலையில் இல்லை, டெல்லியிலும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.

  • Share this:
கொரொனா பாதிப்பு மகாராஷ்டிராவை அடுத்து டெல்லியிலும் கடுமையாக அதிகரித்து வருவது தரவுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது. அங்கு கடந்த 2 மாதங்களில் இல்லாத வகையில் தினசரி நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா பாதிப்பு கேரளாவில் மட்டுமே அதிகரித்துக்கொண்டிருந்த நேரத்தில் கடந்த பிப்ரவரி முதல் வாரம் முதல் கேரளாவை பின்னுக்குதள்ளி மகாராஷ்டிராவில் உயரத் தொடங்கியது. அங்கு தினசரி பாதிப்பு 15,000ஐ கடந்து பதிவாகி வருகிறது. புனே , மும்பை, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாக்பூர் உள்ளிட்ட சில பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் பங்களிப்பு அதிகரித்ததால் இந்தியாவின் கொரோனா பாதிப்பு 20,000ஐ கடந்துள்ளது. மேலும் உயிரிழப்புகளும் அதிகரிக்கத்தொடங்கிவிட்டன. இந்த நிலையில் மகாராஷ்டிராவை அடுத்து டெல்லியிலும் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

டெல்லி


இதனிடையே நிதி ஆயோக்கின் சுகாதார பிரிவு உறுப்பினர் வி.கே.பால் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, மகாராஷ்டிரா மீண்டும் ஊரடங்கினை நோக்கி செல்வது கவலையளிக்கிறது, ஆனால் மகாராஷ்டிரா மட்டுமே கவலைப்படும் நிலையில் இல்லை, டெல்லி, தேசிய தலைநகர் பகுதி, குருகிராம், புத் நகர், காசியாபாத் ஆகிய பகுதிகளும் கவலைக்குரியதாக உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

1. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 409 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஜனவரி 9ம் தேதிக்கு பிறகு அங்கு இப்போது தான் அதிகமான பாதிப்புகள் பதிவாகி உள்ளன. பாசிட்டிவிட்டி ரேட்0 .59 % ஆக உள்ளது. மேலும் 3 பேர் உயிரிழந்ததால் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10,934 ஆக உயர்ந்தது.

2. கடந்த புதனன்று அங்கு 370 பேருக்கும், செவ்வாயன்று 320 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

3. கடந்த ஒரு வாரமாகவே டெல்லியில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாக இருந்து வருகிறது.

4. கடந்த புதன் கிழமையன்று 1,900 ஆக இருந்த சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை தற்போது 2,020 ஆக உயர்ந்துள்ளது.

5. டெல்லியில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை யாரும் சரிவர கடைப்பிடிக்கவில்லை என்று சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர்.

6. மகாராஷ்டிராவை போன்றே டெல்லியிலும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டனர், இதுவே பரவலுக்கு வித்திட்டது என்று குற்றம்சாட்டுகின்றனர்.
Published by:Arun
First published: