Home /News /national /

ஆசை ஆசையாக இளம்பெண் வாங்கிய ஸ்கூட்டி நம்பர் ப்ளேட்டில் SEX... வண்டியே வேணாம் என முடிவு

ஆசை ஆசையாக இளம்பெண் வாங்கிய ஸ்கூட்டி நம்பர் ப்ளேட்டில் SEX... வண்டியே வேணாம் என முடிவு

டெல்லி நம்பர் ப்ளேட் பிரச்னை

டெல்லி நம்பர் ப்ளேட் பிரச்னை

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய புதிய இருசக்கர வாகனத்துக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொடுத்த எண்ணைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

    டெல்லியை சேர்ந்த ஃபேஷன் டிசைனிங் படிக்கும் மாணவிக்கு அவரது தந்தை தீபாவளி பரிசாக இருசக்கரவாகனத்தை வாங்கிக்கொடுத்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்காமல் பேருந்து மெட்ரோ ரயிலுக்கு காத்திருக்காமல் இனி கல்லூரிக்கு வீட்டில் இருந்தே கெத்தாக போகலாம் என எண்ணிய மாணவிக்கு புதிய வடிவில் சோதனை வந்தது. அவரது வண்டியின் நம்பர் பிளேட்டே அவருக்கு பெரும் தலைவலியாக வந்துள்ளது.

    அக்கம்பக்கத்தினரின் கேலியால் அந்தப்பெண்ணால் வீட்டு வாசலையே தாண்ட முடியவில்லை. எனக்கு இந்த வண்டியே வேண்டாம் என்ற மனநிலைக்கு சென்றுவிட்டார். அப்படி அந்த நம்பர் பிளேட்டில் என்னதான் இருக்கிறது எனக் கேட்கிறீர்களா.. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வழங்கப்பட்ட நம்பர் பிளேட்டில் SEX என்று குறிக்கப்பட்ட ஆங்கில வார்த்தைதான் இத்தனைக்கும் காரணம்

    Also Read: கூரியர், பார்சல் அனுப்ப புதிய கட்டுப்பாடுகள்... காவல்துறை உத்தரவு

    இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மாவட்டங்கள் மற்றும் வாகன வகைகளின் அடிப்படையில் பதிவெண் (Registration Number) வழங்கப்படுகிறது. டெல்லியில் பதிவு செய்யப்படும் வாகனத்தில் முதலில் வரும் DL எனும் 2 எழுத்துக்கள் டெல்லி மாநிலத்தை குறிக்கிறது. பின்னர் வரும் 2 எண்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மாவட்டத்தை குறிக்கும்.

    அதன் பின்னர் வரும் எழுத்துக்களில் முதல் எழுத்து C என்று இருந்தால் அது காரையும் S என்று இருந்தால் அது இருசக்கர வாகனத்தையும் குறிக்கும். இப்போது டெல்லியில் இருசக்கர வாகனத்தை பதிவு செய்யும்போது இருசக்கரவாகனத்தை குறிக்கும் S என்ற எழுத்தும் இப்போது புழக்கத்தில் உள்ள சீரிஸாக EX பதிவு செய்யப்படுகிறது. இதன்காரணமாக அந்தப்பெண்ணுக்கு DL 3 SEX ----  என்ற நம்பர் கிடைத்துள்ளது.

    அந்த மாணவி தான் வசிக்கும் பகுதியில் இருந்து தினமும் சிரமம்பட்டு நொய்டாவில் இருக்கும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். ஒருமாதம் தனது தந்தையிடம் அடம்பிடித்து இந்த ஸ்கூட்டியை வாங்கியுள்ளார். இப்படி ஒரு தர்மசங்கடமான சூழல் தனக்கு ஏற்படும் என அந்த மாணவி நினைக்கவில்லை. என் பக்கத்தில் வீட்டில் இருப்பவர்கள் இந்த நம்பர் ப்ளேட்டை பார்த்தை மோசமான கமெண்ட்களை வீசுகின்றனர். வார்த்தைகளால் கொடுமைப்படுத்துகின்றனர் என அந்த மாணவி வேதனை தெரிவித்துள்ளார்.

    Also Read: முல்லை பெரியாறு அணை : கேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    அந்த பெண்ணின் தந்தை வண்டியை வாங்கிய டீலரிடம் சென்று நம்பர் பிளேட்டை மாற்றித்தருமாறு கேட்டுள்ளார்.  உங்க பொண்ணு வண்டியில மட்டுமாங்க இந்த எழுத்து இருக்கு டெல்லியில ஆயிரக்கணக்கான வண்டியில இந்த எழுத்துதான் இருக்கு. நம்பர் ஆன்லைன்ல வந்ததால இதனை மாற்ற முடியாது எனக் கூறியுள்ளார்.

    இதுகுறித்து பேசிய டெல்லி போக்குவரத்து ஆணையர் கேகே தஹியா, ஒரு வாகனத்திற்கு வழங்கப்பட்ட எண்ணை மாற்றித் தருவது சாத்தியமல்ல என்றும் பதிவெண் வழங்குவதில் வரிசை எண் அடிப்படையிலேயே வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த சீரிஸ் முடியும் வரை இந்த சிக்கல் இருந்துக்கொண்டுதான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: College girl, College student, Delhi, Sex, Two Wheeler, Woman

    அடுத்த செய்தி