ஹோம் /நியூஸ் /இந்தியா /

பாலியல் வன்புணர்வு செய்த நபரின் தாயை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சிறுமி...டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்...!

பாலியல் வன்புணர்வு செய்த நபரின் தாயை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சிறுமி...டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்...!

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

தூப்பாக்கிச்சூட்டிற்கு ஆளான பெண்ணின் 25 மகன், சிறுமியை 2021ஆம் ஆண்டில் பாலியல் வன்புணர்பு செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் சிறையில் உள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

டெல்லி சுபாஷ் மோஹால் பகுதியில் குர்ஷிதா என்ற 50 வயது பெண் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கடைக்கு நேற்று மாலை 5.30 மணி அளவில் வடக்கு கோண்டா என்ற பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார்.  திடீரென தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை கொண்டு 50 வயது பெண்ணை சுட்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததோடு, காவல்துறைக்கு தகவல் தந்தனர். விரைந்து வந்த காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுமியை கைது செய்தனர்.

விசாரணையில், துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான பெண்ணின் 25 வயது  மகன் அந்த 17 வயது சிறுமியை 2021ஆம் ஆண்டில் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது தொடர்பான வழக்கில் அந்த இளைஞர் சிறையில் உள்ளார். இந்நிலையில் தான் 2 ஆண்டுகள் கழித்து அந்த வாலிபரின் தாயாரை சிறுமி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதையும் படிங்க: வேண்டுதல் நிறைவேறாத விரக்தி...கோயில் சிலைகளை சேதப்படுத்திய இளைஞர் கைது..!

தனக்கு நேர்ந்த அவலத்திற்கு பழிவாங்கும் விதத்தில் இந்த செயலை சிறுமி மேற்கொண்டாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என காவல்துறை விசாரித்து வருகிறது. துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான 50 பெண்ணின் வயிற்றில் குண்டு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் GTB மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Gun fire, Gun shoot