Home /News /national /

செல்போனில் தொடர்ச்சியாக விளையாட்டு: தந்தை தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு

செல்போனில் தொடர்ச்சியாக விளையாட்டு: தந்தை தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சிறுவனை சோசித்தபோது,  கை,  கால், கழுத்து பகுதியில்  தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தெரிந்துள்ளது. இதையடுத்து, இது குறித்து போலீசுக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்தது.  

    செல்போனில் தொடர்ச்சியாக விளையாடிகொண்டிருந்ததால் 5 வயது மகனை தந்தை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், சிறுவன் உயிரிழந்ததையடுத்து அவனின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

    டெல்லி கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்ய பாண்டே. பால் வியாபாரியான இவருக்கு கியான் பாண்டே என்கிற உத்கர்ஷ் என்ற 5 வயது மகன் உள்ளார். கியான்பாண்டே படிப்பில் கவனம் செலுத்தாமல் தொடர்ச்சியாக மொபைலில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.இது தொடர்பாக ஆதித்ய பாண்டே தனது மகனை கண்டித்தபோதும் சிறுவன் மொபைலில் விளையாடுவதை நிறுத்தவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த ஆதித்ய பாண்டே, தனது மகனை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சிறுவன் மயக்கமடைந்தான்.உடனடியாக அவனை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு பெற்றோர் சென்றுள்ளனர். சிறுவனை சோதித்த மருத்துவர்கள் அவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். காயம் குறித்து பெற்றொரிடம் கேட்டுள்ளனர்.

    அவர்கள் மழுப்பலான பதிலையே அளித்துள்ளனர். சிறுவனை சோசித்தபோது,  கை,  கால், கழுத்து பகுதியில்  தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தெரிந்துள்ளது. இதையடுத்து, இது குறித்து போலீசுக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்தது.   விரைந்து சென்ற போலீசார், கியான் பாண்டேவை அடித்துகொன்ற ஆதித்ய பாண்டேவை கைது செய்தனர்.

    இதையும் படிங்க: 150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கு வாழ்த்துக்கள் - கடற்கரையில் தடுப்பூசியின் மணல் சிற்பம் வடிவமைப்பு!

    Published by:Murugesh M
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Murder

    அடுத்த செய்தி