தோல்வியில் முடிந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தை - டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்

தோல்வியில் முடிந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தை - டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்

டெல்லி விவசாயிகள் போராட்டம்

சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க தயாராக இருப்பதாக கடந்த பேச்சுவார்த்தையின்போது தெரிவித்த கருத்தை பரிசீலிக்குமாறு அமைச்சர் தோமர் கேட்டுக் கொண்டார்.

 • Share this:
  டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

  புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 59-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு 11-வது சுற்று பேச்சுவார்த்தையை இன்று நடத்தியது.

  டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல், சோம் பர்காஷ் ஆகியோரும், 41 விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அப்போது, சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க தயாராக இருப்பதாக கடந்த பேச்சுவார்த்தையின்போது தெரிவித்த கருத்தை பரிசீலிக்குமாறு அமைச்சர் தோமர் கேட்டுக் கொண்டார். ஆனால், சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்தப் பேச்சுவார்த்தையும் எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது.

  அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான தேதியை மத்திய அரசு அறிவிக்கவில்லை என்று பாரதிய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயி சுர்ஜீத் சிங் புல் கூறினார். தங்களை மூன்றரை மணிநேரம் வரை மத்திய அமைச்சர் காக்கவைத்ததாக விவசாயிகள் மஸ்தூர் சங்கத்தைச் சேர்ந்த விவசாயி எஸ்.எஸ்.பாந்தர் குற்றம்சாட்டினார். அமைதியான முறையில் தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  First published: