முகப்பு /செய்தி /இந்தியா / மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு : மணீஷ் சிசோடியா சிபிஐ காவல் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு : மணீஷ் சிசோடியா சிபிஐ காவல் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு

மணீஷ் சிசோடியா

மணீஷ் சிசோடியா

மணிஷ் சிசோடியாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டெல்லியில் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லியில் மதுபான கொள்கை மாற்றியமைக்கப்பட்டதில் அரசு அதிகாரிகளுக்கு பெரிய தொகை லஞ்சமாக கைமாறியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை கடந்த 26ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நிலையில், 5 நாட்கள் காவல் முடிந்து மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது ஆளும் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் கட்சி தலைமை அலுவலகம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, இந்த வழக்கில் மணிஷ் சிசோடியாவை மேலும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரிய நிலையில், 2 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மணிஷ் சிசோடியா ஜாமீன் கோரிய மனு மீது 10ம் தேதி விசாரணை நடைபெறும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இதையும் வாசிக்க:  பர்தா அணிந்து நகைக்கடையில் நூதன முறையில் திருட்டு.. சென்னையில் தாய், மகன் கைது..!

இந்த நிலையில், மணிஷ் சிசோடியாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கர்நாடக பாஜக எம்எல்ஏவின் மகன் லஞ்சம் வாங்கிய விவகாரத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், மணீஷ் சிசோடியா மீது மட்டும் பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக விமர்சித்துள்ளார்

First published:

Tags: Arvind Kejriwal, Politics