Delhi Results 2020 | தலைநகர் தர்பார் யாருக்கு...?

Delhi Results 2020 | தலைநகர் தர்பார் யாருக்கு...?
  • News18
  • Last Updated: February 10, 2020, 5:05 PM IST
  • Share this:
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. சில மணி நேரங்களில் அங்கு ஆட்சியமைக்கப் போவது யார் என்பது தெரியவரும்.

யூனியன் பிரதேசங்களிலேயே டெல்லி, புதுச்சேரி, ஜம்மு காஷ்மீர் ஆகிய மூன்றுக்கு மட்டும் சட்டப்பேரவை உள்ளது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 8-ம் தேதி நடந்தது. ஆளும் ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது.


ஆம் ஆத்மி தனது அரசின் சாதனைகளை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்ள, பாஜகவோ காஷ்மீர் விவகாரம், CAA ஆகியவற்றை முன்வைத்து தேர்தலை சந்தித்தது.

தேர்தல் முடிவடைந்தும் பதிவான மொத்த வாக்கு சதவிகிதத்தை தேர்தல் ஆணையம் வெளியிடாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக கேள்விகள் எழுந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்பான சர்ச்சைக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைத்தது.

மொத்தமாக 62.59 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த நிலையில், நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தலைநகரை ஆளப்போவது யார் என்ற விபரங்கள் தெரியவரும்.

தேர்தல் முடிவுகளை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மற்றும் News18Tamil.Com இணையதளத்தில் நேரலையாக உடனுக்குடன் பார்க்கலாம்...

 
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்