வகுப்புவாத அரசியலை வளர்ச்சி வென்றுள்ளது! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வகுப்புவாத அரசியலை வளர்ச்சி வென்றுள்ளது! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
  • News18
  • Last Updated: February 11, 2020, 2:50 PM IST
  • Share this:
வகுப்புவாத அரசியலை வளர்ச்சி வெல்லும் என்பது தெளிவாக நிரூபணமாகியுள்ளது என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று ஆம் ஆத்மியின் வெற்றியை உறுதி செய்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 58 தொகுதிகளில் அந்தக் கட்சி முன்னிலையில் உள்ளது.

டெல்லியில் பாஜக-வை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி மறுபடியும் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


அந்த ட்வீட்டில், ‘அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கவுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் என் வாழ்த்துகள். வகுப்புவாத அரசியலை வளர்ச்சி வெல்லும் என்பது தெளிவாக நிரூபணமாகியுள்ளது. நாட்டு நலனுக்காக கூட்டாட்சி உரிமைகளையும் பிராந்திய நலனையும் வலுப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

Also see:
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்