காற்று மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லி

தீபாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில், டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது.

news18
Updated: November 8, 2018, 1:10 PM IST
காற்று மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லி
டெல்லியில் காற்று மாசுபாடு
news18
Updated: November 8, 2018, 1:10 PM IST
காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், நாடு முழுவதும் தீபாவளியன்று இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தலைநகர் டெல்லியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மற்றும் ரசாயனம் இல்லாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தீபாவளி முடிவடைந்த நிலையில், டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது.


இந்நிலையில், டெல்லியில் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காற்று மாசு அதிகரித்துள்ளது. இன்றும் பெரும்பாலான பகுதிகளில் புகைமூட்டமாக காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

காற்று மாசு அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


காற்றின் தரம் குறித்த குறியீட்டு அளவு 100-க்குள் இருந்தால் மட்டுமே உடலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு 7:00 மணியளவில் இந்தக் குறியீடு 281-ஆக இருந்தது.

காற்று மாசால் அவதிப்படும் மார்கெட் செல்லும் மக்கள்


இது படிப்படியாக அதிகரித்து இரவு 10:00 மணிக்கு 296-ஆகவும், இன்று காலை 329-ஆகவும் அதிகரித்துள்ளது.  ஆனந்த் விஹார், ஜஹாங்கிர்புரி, மயூர் விஹார், லஜ்புத் நகர் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
Loading...
Also see...

First published: November 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்