Home /News /national /

கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு டெல்லியில் கொரோனா தொற்று அதிகரிப்பு...

கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு டெல்லியில் கொரோனா தொற்று அதிகரிப்பு...

Corona Cases In India

Corona Cases In India

கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் பரவல் கடந்த டிசம்பர் 2ம் தேதியன்று இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. தற்போது வரை 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பரவியிருக்கிறது.

    தலைநகர் டெல்லியில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    கொரோனா பரவலின் மூன்றாம் அலை இன்னும் உச்சத்தை தொடாத நிலையில் இருப்பதால் அடுத்து வரும் நாட்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இன்று வெளியிடப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

    கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 20,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பபட்டுள்ளது. கொரோனா பாசிடிவ் ரேட் 19.60 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,02,965 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் 11,869 பேர் பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளார்கள்.

    தொற்றிலிருந்து குணம் அடைபவர்களின் சதவீதம் 95.19 ஆக உள்ளது. மருத்துவமனையில் தற்போது 1,586 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 27 பேருக்கு வென்டிலேட்டர் உதவியும், 375 பேருக்கு ஆக்சிஜன் உதவியும் அளிக்கப்பட்டுள்ளது. 279 பேர் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் பரவல் கடந்த டிசம்பர் 2ம் தேதியன்று இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. இதன் பின்னர் ஓமைக்ரான் பரவல் உயரத் தொடங்கியது. தற்போது வரை 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பரவியிருக்கிறது.

    கடந்த சில நாட்களாகவே நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 7 மாதங்களில் இல்லாத வகையில் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் 3வது அலை பரவல் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    மேலும் படிங்க: இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எப்போது குறையும்? ஆய்வு தகவல்கள் வெளியீடு

    இந்நிலையில், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,41,986 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 3,53,68,372 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய பாதிப்பை விட இன்று 21% கூடுதலாகும்.

    கடந்த 24 மணி நேரத்தில் 285 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 4,83,463 ஆக உயர்ந்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Covid-19

    அடுத்த செய்தி