உன்னா பெண்ணின் தந்தை மரணம்! பா.ஜ.கவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு

காவல்துறையினர் பெண்ணின் தந்தையை ஆயுதங்கள் வைத்திருந்ததாக கூறி கைது செய்தனர். காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த அவர், சிறையிலேயே உயிரிழந்தார்.

news18
Updated: August 13, 2019, 6:07 PM IST
உன்னா பெண்ணின் தந்தை மரணம்! பா.ஜ.கவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு
குல்தீப் சிங் செங்கார்
news18
Updated: August 13, 2019, 6:07 PM IST
பாலியல் புகார் தெரிவித்த உன்னோ பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் வைத்து உயிரிழந்த வழக்கில் பா.ஜ.கவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் உள்ளிட்ட பத்து பேர் மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னா பகுதியைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட பெண்(பாலியல் வன்கொடுமை நடைபெற்றபோது அவருக்கு வயது 17. அப்போது அவர் சிறுமி). அவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.

2017-ம் ஆண்டு தன்னை உன்னா தொகுதி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் அவரது சகோதரர் உள்ளிட்ட சிலர் பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று குற்றம்சாட்டினார். அதனையடுத்து, காவல்துறையினர் பெண்ணின் தந்தையை ஆயுதங்கள் வைத்திருந்ததாக கூறி கைது செய்தனர். காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த அவர், சிறையிலேயே உயிரிழந்தார். இத்தகைய விவகாரங்களால் இந்த விவகாரம் தலைப்புச் செய்தியானது.

சமீபத்தில், பாதிக்கப்பட்ட உன்னா பெண் சென்ற காரின் மீது லாரி மோதியது. அந்த விபத்தில் உன்னா பெண் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், பெண்ணின் தந்தை உயிரிழந்த வழக்கு டெல்லியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ’அந்தப் பெண்ணின் தந்தை மீது போலியாக வழக்குத் தொடரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர், நீதிமன்றக் காவலிலேயே உயிரிழதுள்ளார். அதில், உள்நோக்கம் இருந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் அதுல் செங்கார், மூன்று காவலர்கள், மற்றும் 5 பேர் மொத்தம் 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.

Also see:

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...