கொரோனா நாடகம் போடுறீங்க.. காருக்குள் ஏன் மாஸ்க் போடவேண்டும் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி தம்பதி

கொரோனா நாடகம் போடுறீங்க.. காருக்குள் ஏன் மாஸ்க் போடவேண்டும் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி தம்பதி

டெல்லி தம்பதி

நான் என் கணவருக்கு முத்தம் கொடுப்பேன். நீங்கள் தடுத்து நிறுத்துவீர்களோ என்றார் ஆவேசமாக.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் காரில் மாஸ்க் அணியாமல் பயணம் மேற்கொண்ட தம்பதி காவல்துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

  டெல்லியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த பகுதியில் வந்த காரை வழிமறித்து சோதனை செய்துள்ளனர். காரில் இருந்த தம்பதி முகக்கவசம் அணியாமல் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து இருவரையும் மாஸ்க் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். உடனே காரில் இருந்த தம்பதி இருவரும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த காரில் இருந்த தம்பதியினர் பங்கஜ் குப்தா மற்றும் அப்ஹா குப்தா என்பது தெரியவந்துள்ளது. காரில் இருந்தபடியே சத்தம் போட்ட பங்கஜ் குப்தா, நீங்கள் ஏன் என் காரை நிறுத்தினீர்கள்? எனது மனைவியுடன் எனது காரில் நான் தனிமையில் இருக்கிறேன்’எனக் கூறினார்.

  ஆத்திரமடைந்த அந்த பெண், கொரோனா பெயரில் நீங்கள் நாடகம் நடத்துகிறீர்கள். நான் எனது காருக்குள் இருக்கும்போது ஏன் மாஸ்க் போட வேண்டும். நான் எனது கணவருக்கு முத்தம் கொடுக்கவேண்டும் என்றால் என்ன செய்வது. நான் என் கணவருக்கு முத்தம் கொடுப்பேன். நீங்கள் தடுத்து நிறுத்துவீர்களோ என்றார் ஆவேசமாக. தனது கணவரிடம் காரை எடுக்கும் மாறு கத்தினார். அந்த நபரும் காரை அங்கிருந்து நகர்த்த முயன்றார். போலீஸார்கள் அவர்களை சுற்றி வளைத்து நிறுத்தினர்.
  காரில் இருந்த இறங்கிய தம்பதியினர் தொடர்ந்து அங்கிருந்த காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்தப்பெண் மாஸ்க் அணியாததற்கு சலான் கொடுக்கிறீர்களா என காவல்துறையினரை ஒருமையில் பேசினார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் மகளிர் காவலரை அழைத்தனர். மகளிர் காவலர்கள் அந்தப்பெண்ணை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சாலையில் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்கள் இருவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு பங்கஜ் குப்தா கைது செய்யப்பட்டார்.
  Published by:Ramprasath H
  First published: