டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் 4வது அலை வந்து விட்டதா என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 517 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பை விட 56 எண்ணிக்கை அதிகமாகும்.
ஒட்டுமொத்தமாக டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்து 68 ஆயிரத்து 550 ஆக உயர்ந்துள்ளது. 26 ஆயிரத்து 160 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வியாழன் அன்று பாதிப்பு 325 ஆகவும், வெள்ளியன்று 366 ஆகவும், சனிக்கிழமை 461 ஆக வும் டெல்லியில் கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது. தொடர்ந்து கணிசமாக பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க - என்ன உணவு சாப்பிடலாம், சாப்பிட கூடாது என்பதை அரசு உத்தரவிட முடியாது - அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டி
தற்போது டெல்லி மருத்துவமனைகளில் 9,662 படுக்கைகள் உள்ளன. இவற்றில் 9,156 படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதிகள் உள்ளன. இதை தவிர்த்து சுமார் 2 ஆயிரம் படுக்கைகள் அவசர சிகிச்சை பிரிவிலும், வென்டிலேட்டர் வசதிகளுடன் வைக்கப்பட்டுள்ளன.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க - நான்காம் அலையை நோக்கி நகர்கிறதா இந்தியா? - நிபுணர்கள் கூறுவது என்ன?
கடந்த 2ம் தேதி வெளியான அறிவிப்பில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் ஏதும் விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அதிகரிப்பு குறித்து மூத்த சுகாதார அதிகாரி கூறுகையில், 'கொரோனா அறிகுறிகள் காணப்பட்டாலும் மக்கள் அதற்காக பரிசோதனை செய்து கொள்வதில்லை. பெரும்பாலும் இந்த தவறுகள் நடக்கின்றன. கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே அறிகுறிகள் இருப்போர் அவசியம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.