பெண்ணை சரமாரியாக தாக்கிய போலீஸ் அதிகாரியின் மகன் கைது-வீடியோ

news18
Updated: September 14, 2018, 6:16 PM IST
பெண்ணை சரமாரியாக தாக்கிய போலீஸ் அதிகாரியின் மகன் கைது-வீடியோ
கோப்புப்படம்.
news18
Updated: September 14, 2018, 6:16 PM IST
டெல்லியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியின் மகன் இளம் பெண்ணை சரமாரியாக அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் வாலிபர் ஒருவர் ஒரு இளம்பெண்ணைக் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில்  இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் முடியைப் பிடித்து தரையில் இழுத்து வந்து, காலால் உதைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த மனதை பதறவைக்கும் வன்முறை வீடியோவை பார்த்த பலரும், சமந்தப்பட்ட அந்த வாலிபரை கைதுசெய்ய கோரிக்கை வைத்தனர்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்த வீடியோவில் உள்ள வாலிபரை கைது செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் அந்த வீடியோவில் உள்ள வாலிபர் டெல்லியை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் மகன் என்பதும், அவர் பெயர் ரோஹித் சிங் தொமார் என்பதும் தெரியவந்தது.

இந்த வீடியோவில் தாக்கப்படும் அந்த பெண்ணை, டெல்லி உத்தம் நகரில் உள்ள தன் நண்பரின் அலுவலகத்துக்கு ரோஹித் அழைத்துள்ளார். அங்கே சென்ற அவரிடம் ரோஹித், தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதற்கு அப்பெண் மறுக்கவே அவரை சரமாரியாக ரோஹித் தாக்கியதாகத் தெரிகிறது.

இதனையடுத்து ரோஹித் கைது செய்யப்பட்டுள்ளார். இது மட்டுமல்லாமல். இன்னொரு பெண்ணும் ரோஹித்தின் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணிடம் இந்த வீடியோவை காட்டி `நான் சொல்வதை நீ கேட்கவில்லை என்றால் இதே கதிதான் உனக்கும்’ என்று  தன்னை மிரட்டியதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.
First published: September 14, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்