• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கொரோனா தடுப்பூசி மையத்துக்கு மூதாட்டியை தூக்கிச் சென்ற டெல்லி காவலர் - நெட்டிசன்கள் பாராட்டு

கொரோனா தடுப்பூசி மையத்துக்கு மூதாட்டியை தூக்கிச் சென்ற டெல்லி காவலர் - நெட்டிசன்கள் பாராட்டு

டெல்லி காவல்துறை

டெல்லி காவல்துறை

தலைநகர் டெல்லியில் கொரோனா தடுப்பூசி  செலுத்துவதற்காக 81 வயது மூதாட்டியை சுமந்த சென்ற காவலரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    டெல்லியை சேர்ந்த 81 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக காவல்துறையினரின் உதவியை கேட்டுள்ளார். அவருக்கு காவல்துறையினர் உதவி செய்துள்ளார். காவலர் ஒருவர் மூதாட்டியை கொரோனா தடுப்பூசி போடும் மையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். மூதாட்டியால் நடக்க முடியாத காரணத்தால் காவலரே அவரை தூக்கி சென்றுள்ளார். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலானது. இதனையடுத்து டெல்லி காவல்துறையினருக்கும் அந்த காவலருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

     



    டெல்லியைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற ஆங்கில ஆசிரியை சைலா ( வயது 81). கடந்த இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்துள்ளார். அவரால் எழுந்து நடக்க முடியாது. வீட்டில் ஒருவர் அவரை பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில்தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள காவல்துறையினரிடம் உதவி கோரியுள்ளார். டெல்லி காவல்துறையில் காவலராக பணிபுரியும் குல்தீப் சிங், சைலா வசிக்கும் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    குல்தீப் சிங் சைலாவை கொரோனா தடுப்பூசி மையத்துக்கு அழைத்துச்சென்றுள்ளார். சைலா உடல்முழுவதும் பாதுகாப்பு கவசம் அணிவித்து அழைத்து செல்லப்பட்டார்.அதுமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பூசி போட பதிவு செய்வதற்கு ம் உதவி புரிந்துள்ளார். தடுப்பூசி போடும் மையத்தில் சக்கர நாற்காலியில் அவரை அமரவைத்து அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து வீடு திரும்பியுள்ளனர். அவர் வசிந்த குடியிருப்பு மிகவும் குறுகலாக இருந்துள்ளது. மாடிப்படியில் அவரால் ஏற முடியாது சூழல் இதனையடுத்து குல்தீப் சிங் அவரை தூக்கிச் சென்றுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. டெல்லி காவல்துறையினரின் நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டு குவிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: