என்னை வாளால் வெட்ட வந்தார்கள்; எங்களைத் தாக்கியது குண்டர்கள்தான், விவசாயிகள் அல்ல: டெல்லி போலீஸார்
என்னை வாளால் வெட்ட வந்தார்கள்; எங்களைத் தாக்கியது குண்டர்கள்தான், விவசாயிகள் அல்ல: டெல்லி போலீஸார்
சீக்கியர்கள்.
முதுகு, தோள்பட்டை என்று என்னைக் கடுமையாகத் தாக்கினார்கள், எந்தப் பக்கத்திலிருந்து தாக்கினார்கள் என்று கூட தெரியவில்லை. என்னை வாளால் வெட்ட முயன்ற போதுதான் அங்கிருந்து தப்பினேன். இருப்பினும் எங்கள் மீது தொடர்ந்து கற்களை எறிந்தனர்
டெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற கலவரத்தில் காயம்பட்ட போலீஸார்கள் தங்களைத் தாக்கியது குண்டர்கள்தானே தவிர விவசாயிகள் இல்லை என்கின்றனர்.
சுமார் 300 போலீசார் அதில் காயமடைந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
53 வயதான காவல்துறை துணை ஆணையர் ஜொகீந்தர் ராஜ் அன்று நடந்ததை விவரிக்கும் போது, “நான் என் பணியில் நிறைய போராட்டங்களையும் கலவரங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் சந்தித்துள்ளேன், ஆனால் இது போன்ற ஒன்றை சந்தித்தது இல்லை.
முதுகு, தோள்பட்டை என்று என்னைக் கடுமையாகத் தாக்கினார்கள், எந்தப் பக்கத்திலிருந்து தாக்கினார்கள் என்று கூட தெரியவில்லை. என்னை வாளால் வெட்ட முயன்ற போதுதான் அங்கிருந்து தப்பினேன். இருப்பினும் எங்கள் மீது தொடர்ந்து கற்களை எறிந்தனர்” என்றார்.
இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை 25 எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. 19 பேர் கைதாகியுள்ளனர்.
இதற்கிடையே டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது செங்கோட்டையில் சீக்கியர்களின் கொடியை ஏற்றியதை நடிகர் தீப் சித்து ஒப்புக் கொண்டுள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தீப் சித்து, 2015-ம் ஆண்டில் வெளியான பஞ்சாபி மொழி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட இந்தி நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சன்னி தியோலுடன் தீப் சித்து இருக்கும் புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.
பாஜக-வைச் சேர்ந்தவர் தீப் சித்து என்று விவசாய சங்கத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விவசாயிகள் பேரணியில் சமூகவிரோதிகள் மற்றும் பாஜகவினர் ஊடுருவி வன்முறையில் ஈடுபட்டதாக விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
தங்களது போராட்டத்தின் தொடக்கத்திலிருந்து சித்து கலந்துகொள்ளவில்லை என்று விவசாயிகள் சங்கத் தலைவர் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார். சம்பு எல்லையில் நடந்த போராட்டத்தின்போது, அவரது நடவடிக்கைகளைப் பார்த்து, அவரை நீக்கினோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.