டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மகளைக் கடத்தப்போவதாக மிரட்டல் மெயில்!

முதல்வர் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மகளைக் கடத்தப்போவதாக மிரட்டல் மெயில்!
கெஜ்ரிவால்
  • News18
  • Last Updated: January 13, 2019, 12:24 PM IST
  • Share this:
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் கடத்தப்படுவார் என அவருக்கே மிரட்டல் மெயில் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘உங்கள் மகள் ஹர்ஷித்தாவை கடத்தப்போகிறோம்’ என கடந்த ஜனவர் 9-ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் மெயில் வந்தது. மர்ம ஆசாமி ஒருவர் அனுப்பிய இந்த மிரட்டல் மெயில் குறித்து டெல்லி முதல்வர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து, முதல்வருக்கே மிரட்டல் மெயில் வந்த சம்பவம் குறித்து, டெல்லி இணைய குற்றங்கள் தடுப்பு பிரிவு (சைபர் க்ரைம்) காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது, எந்தக் கணிணியில் இருந்து அனுபப்பட்டது என்பது குறித்து ஐபி அட்ரஸ் மூலம் தெரிந்துகொள்ளும் பணி நடந்து வருவதாக டெல்லி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா (கோப்புப்படம்- News18)


கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கடந்த 2014-ம் ஆண்டு சிபிஎஸ்இ ப்ளஸ்2 தேர்வில் 96 சதவிகிதம் மதிப்பெண் பெற்றும் ஐஐடி நுழைவுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற போதும் செய்திகளில் பிரபலமானார். அதன் பின்னர் தன் குடும்பத்தார் குறித்த செய்திகளை மிகவும் வெளிப்படுத்தாதவராகவே கெஜ்ரிவால் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய சூழலில் முதல்வர் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, கூடுதல் தகவல்கள் ஏதும் முதல்வர் கெஜ்ரிவால் அல்லது டெல்லி காவல்துறை சார்பில் இதுவரையில் வெளியிடப்படவில்லை.மேலும் பார்க்க: கோடநாடு குற்றச்சாட்டும்... முதல்வர் விளக்கமும்...
First published: January 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்