பிரதமர் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்த வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்!

தன்னுடைய அலுவலகம், கொல்கத்தா காவல் ஆணையர் இல்லம் ஆகியவற்றில் நுழைந்ததைப் போன்று, சுதந்திரமான சிபிஐ அமைப்பு, பிரதமர் அலுவலகத்துக்குள் நுழைய வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால்  தெரிவித்துள்ளார்.

news18
Updated: February 9, 2019, 2:08 PM IST
பிரதமர் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்த வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்!
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்
news18
Updated: February 9, 2019, 2:08 PM IST
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்த வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்த வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்து தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தன்னுடைய அலுவலகம், கொல்கத்தா காவல் ஆணையர் இல்லம் ஆகியவற்றில் நுழைந்ததைப் போன்று, சுதந்திரமான சிபிஐ அமைப்பு, பிரதமர் அலுவலகத்துக்குள் நுழைய வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால்  தெரிவித்துள்ளார்.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ரபேல் ஒப்பந்தத்தில் 59 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளை குறிப்பிட்டுள்ளார்.

இது இந்திய பாதுகாப்புத்துறையின் மிகப்பெரிய ஊழல் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது. பாஜக அரசு மோசமான முடிவுகளையே மேற்கொண்டுள்ளது என்பதை உணர்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Also see...

First published: February 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...