Home /News /national /

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா உறுதி

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா உறுதி

Arvind kejriwal

Arvind kejriwal

Arvind Kejriwal: டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனினும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை, லேசான பாதிப்புதான் ஏற்படுகிறது என்று சில தினங்களுக்கு முன்னர் தான் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் வீரியமாக பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்பு கண்டறியப்பட்ட வைரஸ் வேரியண்ட்களை காட்டிலும் ஓமைக்ரான் மிக அதிக வேகத்தில் பரவி வருவதுடன், அது தடுப்பூசி திறனையும் கணிசமான அளவில் பாதிக்கும் என்பதும் மிரட்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் 1,800க்கும் மேற்பட்டோர் இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிராவில் அதிக அளவாக 578 பேர் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, கேரளா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருந்து வருகின்றன. ஓமைக்ரான் 3வது அலை பரவலுக்கு வித்திட்டுள்ளது.

    Also read: மெட்ரோ நகரங்களில் ஏற்படும் பாதிப்புகளில் 75% ஓமைக்ரான் தான் - மூத்த விஞ்ஞானி 



    இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு சிறிய அளவில் அறிகுறிகள் தென்பட்டன. நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் சமீபத்திய நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் உங்களை உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனினும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை, லேசான பாதிப்புதான் ஏற்படுகிறது என்று சில தினங்களுக்கு முன்னர் தான் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Also read: ஆந்திராவில் என்.டி.ஆர் சிலையை சம்மட்டியால் அடித்து உடைக்க முயற்சி -ஆளும் கட்சிப் பிரமுகர் கைது...

    டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் ஒரு சதவீதம் மட்டுமே நோயாளிகள் இருக்கிறாரகள், 99 சதவீதம் காலியாகவே இருக்கின்றன. கடந்த 2-வது அலையோடு ஒப்பிடுகையில் ஒமைக்ரானால் பாதிப்பு குறைவுதான். அதேபோல், டெல்டாவை விட ஒமைக்ரான் தொற்று மிதமானது தான். ஆனாலும் முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், சோப்புடன் கைகளைக் கழுவவும், கவலைப்பட வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியது நினைவுகூறத்தக்கது.

    Also read:  உணவில் இருந்த எலியின் கண்கள் - சூப்பர் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிய இளைஞருக்கு அதிர்ச்சி

    முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜெஜ்ரிவாலில் மனைவி சுனிதா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

     
    Published by:Arun
    First published:

    Tags: Arvind Kejriwal, Corona, Covid-19, Delhi

    அடுத்த செய்தி