முகப்பு /செய்தி /இந்தியா / டெல்லி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

அரவிந்த கெஜ்ரிவால்

அரவிந்த கெஜ்ரிவால்

Delhi CM Arvind Kejriwal | டெல்லி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பெரும்பான்மையை நிரூபித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை உடைத்து தனது தலைமையிலான அரசை கவிழ்க்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் அனைவரும் தம்மிடம் இருப்பதை நிரூபிக்கும் வகையில், நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இந்நிலையில், இன்று  சட்டப்பேரவையில நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதற்கு முன்பாக, கவன ஈர்ப்பு நோட்டீஸ்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். பாஜக எம்எல்ஏக்கள் விஜேந்தர் குப்தா, அபேய் வர்மா, மோகன் சிங் பிஸ்த் ஆகியோர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவர்களை அவையில் இருந்த வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு அவை துணை தலைவர் ராக்கி பிர்லா  உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்க: 2024-ல் பாஜகவை ஆட்சியை விட்டு அகற்றுவதே எனது கடைசி போராட்டம் - மம்தா சூளுரை

இதையடுத்து பிற பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து மொத்தமுள்ள 70 எம்எல்ஏக்களில், 58 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் பெரும்பான்மையை நிரூபித்தார்.மேலும் ஆம் ஆத்மியில் 62 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 2 பேர் வெளிநாடுகளில் இருப்பதாகவும், ஒருவர் சிறையில் உள்ளதாகவும், மற்றொருவர் அவைத்தலைவர் எனவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

First published:

Tags: Aam Aadmi Party, Arvind Kejriwal, Delhi